Thursday , October 14 2021

அதிக லாபம் தரும் பச்சை மிளகாய் பயிர் செய்கை செய்வது எப்படி

Share This

#அதிக_லாபம்_தரும்_பச்சை_மிளகாய்_பயிர்_செய்கை_செய்வது_எப்படிLF
🌳🌶️🌶️🌳🌳🌶️🌶️🌳🌳🌶️🌶️🌳🌳🌶️🌶️

அதிக லாபம் தரும் பயிற்செய்கைகளில் மிளகாய் பயிற்செய்கையும் ஒன்று. இதனை அனுபவப்பட்ட விவசாயிகள் நன்கறிவார்கள்.

நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை.

கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும்.

ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள். ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாாயிகள் பச்சை மிளகாய் எல்லாகாலங்களிலும் உறுதி செய்ய ஏற்றவை என்று கூறுகிறார்கள்,

ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 நாற்று தேவைப்படுகிறது
நாட்டு வகைகள் அந்தந்த பகுதிகளில் பயிர் செய்ய ஏற்றது.

பதியம் வைத்தல் (நாற்றங்கால்) மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீ. நீளம், 15 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

நாற்று மேடைகளுக்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் 5-10 செ.மீ. இடைவெளியில் வரிசையில் விதைத்தபிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பி, பூவாளியால் தண்ணீர் ஊற்றவும். விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும்.

நடுவதற்கு 40 முதல் 44 நாட்கள் வயது டைய நாற்றுகளே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.

நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின்போது ஹெக்டருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்கிய குப்பை இட்டு பயிருக்கு பயிர் 2 × 1 1/2 அடி இடைவெளியில் நடவேண்டும்.
விதைத்த 70, 100 வது நாலில் உரம் இட்டபின் நீர் பாய்ச்ச வேண்டும்.

பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையும், 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட தயிர் கரைசல். மற்றும் வளர்ச்சி ஊக்கியான ஜீவாமிர்தத்திணை பயன்படுத்தலாம்.

பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
விளைச்சல்: ஒரு ஏக்கருக்கு-210-240 நாட்களில், வற்றல்- 1-2 டன்,
பச்சைமிளகாய்- 6 – 8 டன் பெறலாம்

இதுபோன்று முற்றுமுழுதாக இயற்கை முறையில் பச்சை மிளகாய் பயிற்செய்கை செய்ய முடியும்
இயற்கை முறையிலான ஆலோசனை தேவையெனில் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!