Saturday , October 23 2021

அதிக லாபம் தரும் வெண்டைக்காய் பயிற்செய்கை

Share This

#அதிக_லாபம்_தரும்_வெண்டைக்காய்_பயிற்செய்கைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🍁🍀🍂🌿🌳

சிறந்த முறைகளை விவசாயிகள் முழுமையாகக் கடைப்பிடித்தால்,
45 நாளில் விளைச்சல் தரும் வெண்டைக்காய் பயிர் செய்து லாபம் ஈட்டலாம்

பயிர் வகைகளில் வெண்டை இலகுவாகவும்
சிரமம் இல்லாமலும் பயிர் செய்யலாம்
நாங்கள் எதிர்பார்ப்பதை விட மிக விரைவில் அறுவடைக்கு தயாராகும் பயிர்களில் இதுவும் ஒன்று.

ஏனைய பயிர்கள் போன்று அல்லாமல் வெண்டைக்காயை பொறுத்தவரை இலகுவான முறையில் நடுகை செய்து அறுவடை செய்யலாம்.

வெண்டைக்காயை பொருத்தவரை பத்து ரகங்களுக்கு மேல் உள்ளது
ஆகையால் பெரிய காய்களை உடைய ரகங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இது வெப்பம் விரும்பும் பயிர்.
ஆகையால் நீண்ட நேர வெப்ப நாள் இதற்குத் தேவை.
பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.

வெண்டையை எல்லா வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்ணில் மிகவும் நன்றாக வளரும்.

கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

2 அல்லது 3 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு உழவேண்டும்.

விதைகளை 30 × 60 செமீ இடைவெளியில் 3 விதைகள் என்ற விகிதத்தில் நட வேண்டும்.
10 நாள்களுக்கு பின் 2 செடிகளை விட்டு மீதம் உள்ள செடியை அகற்றிவிட வேண்டும்.

நட்டவுடன் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
பின் தேவைக்கு ஏற்றால் போல் ஒன்று விட்டு ஒரு நாள் நீர் வழங்க வேண்டும்.

இப்பயிருக்கு செலவில்லாமல் இயற்கை உரமான ஆட்டெரு அல்லது மாட்டெரு அல்லது கோழி எரு போன்றவற்றை மேல் உரமாக பயன்படுத்தலாம்.

விதைகள் நட்டு 30ஆம் நாள்
களையெடுக்க வேண்டும்.
பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கிருமிநாசினி களை பயன்படுத்தலாம்.

#உதாரணம்
கற்பூர கரைசல் ,பஞ்சகாவியா,புகையிலை கரைசல் போன்ற இயற்கை கிருமிநாசினி களை பயன்படுத்தலாம்

நட்ட 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்ற முன் அறுவடை செய்யவேண்டும். 2 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம்.

1 ஏக்கருக்கு 8 முதல் 10 டன் காய்கள் வரை கிடைக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!