Friday , October 15 2021

அதிக விளைச்சல் தரும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை

Share This

#அதிக_விளைச்சல்_தரும்_உருளைக்கிழங்கு_பயிர்ச்செய்கைLF
☘️🌳🍃🌾☘️🌳🍃🌾☘️🌳🍃🌾☘️🌳🍃
🥑🌽🍊🍆🍑🥑🍊🍊🍆🍑🥑🌽🍊🍆🥑

நடப்புப் பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான உருளைக்கிழங்கை பயிர் செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தோட்டப் பயிரான உருளைக்கிழங்கு ஜனவரி – பிப்ரவரி, மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர் ஆகிய பருவங்களில் பயிர் செய்யலாம்.

இந்தப் பயிருக்கு மணல் கலந்த வண்டல் மண் சிறந்ததாகும். ஒரு ஏக்கருக்கு 1500 Kg வரை விதை தேவைப்படும்.

#விதை_நேர்த்தி:
விதைக் கிழங்குகளை நோய் தாக்காத நிலங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். சிறியத் துண்டுகளாக வெட்டிய விதை கிழங்கை உபயோகப்படுத்தும்போது அதை 10-15 செல்சியஸ் வெப்ப நிலையிலும், 85 முதல் 90 சதவீத ஈரப்பதத்திலும், 4 முதல் 6 நாள்கள் வரை வைக்க வேண்டும்.

இவ்வாறு வைப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் கிழங்கில் நுழைவதைத் தடுக்கலாம்.
விதை முளைப்பை அதிகப்படுத்த 25 பிபிஎம் ஜிப்ராலிக் அமிலத்தில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்த வேண்டும்.

இவற்றை 10 நாள்கள் ஒரு சாக்கு பேக்கில் நிரப்பி காற்றோட்டமுள்ள இருட்டு அறையில் வைக்க வேண்டும்.
4 அடி அகலமுள்ள உயரப் பாத்தியில் 30 செ.மீ. இடைவெளியில் 4 வரிசை வருமாறு நட வேண்டும்.

#நீர்_வழி_உரமிடல்:
சொட்டு நீர்ப் பாசன முறையில் தினமும் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டு.

நடவு செய்த 25 நாள்களுக்குப் பிறகு விதைக் கிழங்கின் இடைக்கணுப் பகுதியில் இருந்து தண்டு முளைத்து மண்ணை நோக்கி வளரும்.
பின்னர் அதன் நுனியில் இருந்து கிழங்கு உருவாகத் தொடங்கும் இந்த நிலையில் மண் அணைத்தல் மிகவும் அவசியம்.

#அறுவடை:
அறுவடை செய்ய கிழங்குகளைத் தோண்டி எடுத்து சுத்தம் செய்து பேக்கில் சேகரிக்கலாம்.
விதைக்காக கிழங்குகளை அறுவடைக்கு 15-இல் இருந்து 20 நாள்களுக்கு முன்பிருந்து நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
இதன் மூலம் கிழங்குகளின் தோல் தடிமனாகி அதன் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்தும்.
மேலும் வைரஸ் நோய்களை மற்றச் செடிகளுக்கு பரப்பும் அசுவினி பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கிறது.
இதை சிறந்த முறையில் விதைக்காகப் பயன்படுத்தலாம்.

அறுவடை செய்த கிழங்குகளை ஓரிடத்தில் குவியலாக வைப்பதன் மூலம் அவற்றை சுத்தம் செய்வது எளிதாகிறது.
பின்னர் பெரிய, சிறிய, நடுத்தர அளவுள்ள கிழங்குகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நோய், பூச்சித் தாக்கிய கிழங்குகளை தனியே எடுத்துவிட வேண்டும்.
இந்த முறையில் விவசாயிகள் உருளைக் கிழங்கைப் பயிரிட்டால் அதிக பயன்பெறலாம் என வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!