Friday , October 15 2021

அன்னாசி பயிரிடும் முறை

Share This

#அன்னாசி_பயிரிடும்_முறைLF
🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍
🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿

அன்னாசி பயிரை பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.

அன்னாசிப்பழம் பொதுவாக நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டும்.

அன்னாசி பயிற்செய்கை முறை (pineapple cultivation) பொறுத்தவரை பயிருக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன் படுத்திக்கொள்ள வேண்டும். நாற்றுகளை இரட்டை வரிசை முறையில் நடவு செய்வதற்கு ஏற்றவாறு பார்களை அமைக்க வேண்டும்.

கொண்டைகள், மேல் கன்றுகள், பக்க கன்றுகள் ஆகியவை நடவு செய்வதற்கு பயன்படுகிறது. 300 முதல் 350 கிராம் எடையுள்ள கன்றுகள் தேர்வு செய்து நட வேண்டும்.

கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 30 செ.மீ ஆகவும், வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளி 60 செ.மீ ஆகவும் இருக்குமாறு விதை நேர்த்தி செய்த கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

அன்னாசி பயிற்செய்கை பொறுத்தவரை மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அன்னாசி பயிற்செய்கை முறை (pineapple cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு தொழு உரம் 40 முதல் 50 டன் இட வேண்டும்.

பின்பு மூன்று மாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.

பழத்தின் எடை அதிகரிக்க ஜீவாமிர்தம் கரைசலை.
காய் பிடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தெளிக்கவேண்டும். இதனால் பழங்கள் பெரியதாகி எடை அதிகரிக்கும்.

அன்னாசி களை நிர்வாகம்:-
அன்னாசி பயிற்செய்கை முறை பொறுத்தவரை களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை உரமிடும் பொழுதும், அறுவடை முடிந்த பின்பும் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். பழத்தின் பருமனை அதிகரிக்க காய்பிடித்து ஒன்றிரண்டு மாதங்களில் கொண்டையின் குருத்தை கிள்ளி எடுத்துவிட வேண்டும்.

இதனால் 12 – 20 சதவீதம் வரை பழங்கள் பெரியதாகும். கன்று நட்ட 12 மாதங்களில் பூ வர ஆரம்பித்து 18 மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும்.

இந்த அன்னாசி பயிற்செய்கை முறை பொறுத்தவரை பழங்கள் மஞ்சள் நிறமாக மாறியபின் அறுவடை செய்யவேண்டும். ஒரு ஏக்கருக்கு 30 டன் வரை பழங்கள் கிடைக்கும்.

அன்னாசி பழத்தை பொருத்தவரை சந்தை வாய்ப்பினை பற்றி கவலைப்பட தேவையில்லை
இதற்கான கேள்வி எப்போதும் உள்ளது

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!