Friday , October 22 2021

அருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்

Share This

#அருமையான_வருமானம்_தரும்_ஒருங்கிணைந்த_பண்ணை_விவசாயம்LF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியாவைவிட மக்கள் தொகை குறைந்த நாடுகள்.
எனினும் அந்நாடுகள் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ளன. அந்நாட்டு விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வேளாண்மை மேற்கொள்வதே இதற்கு முக்கிய காரணமாகும்.

மேலும் இதற்கு சிறந்த உதாரணமாக கியூபாவை கூறலாம்.
ஆம் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டிய நாடுகள். பட்டியலில் கியூபா, டென்மார்க், போன்ற நாடுகள் இருப்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்

பொதுவாக விவசாயிகள் பயிர்களை மட்டுமே நடுகை செய்கிறார்கள்.
இது சில நேரங்களில் அவர்களுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் பயிர் நடுகை செய்வதோடு கறவை மாடு, ஆடு, பன்றி, மீன், கோழி, வாத்து, காடை, காளான்.
போன்றவற்றை வளர்த்து விற்பனை செய்யும் உப தொழில்களில் ஈடுபடுவதே ஒருங்கிணைந்த பண்ணை வேளாண்மை முறையாகும்.

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணை திட்டம் வகுக்கும்போது சிறுபோக மற்றும் பெரும்போக நிலங்களுக்கு ஏற்ப பயிர் திட்டத்தை வகுக்க வேண்டும்.
அந்த பயிர் திட்டத்திற்கு ஏற்ப நன்கு வருமானம் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.

பண்ணையில் விளையும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் கிடைக்கும்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் பயிர்களை பயிரிடுவதில் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம். முதல் போகத்தில் நெல் பயிரிட்டால், இரண்டாம் போகத்தில் மக்காச்சோளமும் பயிரிடலாம். அடுத்து ஒருங்கிணைந்த பண்ணையத்தில் செய்யப்படும் மற்ற உபதொழில்கள் குறித்து பார்ப்போம்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் உபதொழில்களில் ஒன்றான கோழி வளர்ப்பு சிறந்த தொழிலாகும். நெல்லிலிருந்து கிடைக்கும் தவிடையே கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

மாற்று பயிர்களில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழிக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.

இவ்வாறு பயிர்ற்செய்கையில் கிடைத்த தீவனங்கள் மூலமாக கோழி தீவன செலவை சுமார் 75 சதவீதம் குறைக்க முடியும்.

வளரும் கோழிகளை 8வது வாரத்தில் விற்பனை செய்யலாம். பெருமளவு தீவன செலவு குறைவதால் கோழி விற்பனையில் அதிக லாபம் ஈட்ட முடியும்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் உப தொழிலான மீன் வளர்ப்பை முறையாக செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம். வளர்க்கும் மீன்களுக்கு உணவாக கோழியின் கழிவுகளையே கொடுக்கலாம்.
மீன் வளர்த்து. அந்த தண்ணீரை பயிர்களுக்கு பயன்படுத்தலாம் அதிக விளைச்சல் கொடுக்கும்.
அதோடு பண்ணை நிலங்கள் பச்சை பசேலென்று இருக்கும் இதனால் ஆடு. மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறை இருக்காது

கோழியை வளர்த்து லாபம் ஈட்டுவது போல ஒருங்கிணைந்த பண்ணையில் காடை வளர்ப்பையும் மேற்கொள்ளலாம். 1000 காடை குஞ்சிகளை வளர்ப்பதற்கு 200 சதுரடி இடம் போதுமானது. இதன்மூலம் மாதம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டமுடியும்.

பயிர்களை அறுவடை செய்தவுடன் பண்ணை குட்டையில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் அடைவதோடு நாட்டின் உணவு உற்பத்தியும் தன்னிறைவை அடையும்.

அதோடு விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை இது போன்ற உப தொழில்கள் மூலமே ஈடு செய்து கொள்ள முடியும்.

சிறிய அளவிலான விவசாய பண்ணைத் தொழில்கள் ஆரம்பிப்பதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்பதனை நீங்கள் அறிய வேண்டும்.

ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் ஊடாகத்தான் இலகுவில் லாபம் ஈட்ட முடியும் என்பதனை அதிகமானோர் அறிவதில்லை
கடின உழைப்பும் சாமர்த்தியமும் இருந்தால் போதும். வேறு யாருடைய உதவியும் எமக்கு தேவையில்லை

நன்றி…
Laxci Farm.

The US and Russia are less populous than India. However, they have become self-sufficient in agricultural production. The main reason for this is that the farmers in the country are engaged in integrated farming.

Cuba is a good example of this.
Yes, you are well aware that countries such as Cuba, Denmark, etc. are on the list of countries that have achieved integrated farming and natural agriculture.

Usually, farmers only plant crops.
This can sometimes cause them to lose. In this case, planting crops, milking cow, goat, pig, fish, poultry, duck, quail and mushrooms.
An integrated farming business is a subsidiary business that grows and sells such products.

When setting up a farm system in integrated farming system, the crop plan should be tailored to small and large plots.
One or two or three sub-sectors of crop income should be selected according to that crop plan.
Selected subtypes depend on one another.

Fodder preparation should be prepared with grain in the farm. Only then will the production costs for the sub-industries decrease. Get more profit.

Rotation can be carried out in planting crops on this integrated farm. If rice is grown in the first crop, maize can be grown in the second. Next we will look at other sub-works on integrated farming.

Poultry farming is one of the sub-divisions of integrated farming. Towel can be used as fodder for chickens.

Maize, one of the alternative crops, can also be used as fodder for poultry.

Thus, the cost of poultry feed can be reduced by about 75 per cent through the fodder available.

Growing chickens can be sold in the 8th week. Poultry sales can be made more profitable due to reduced feed costs.

Integrated farming can be profitable if done properly.
Poultry waste can be fed to fish.
The water used by the fish can be used for crops. High yields.
In addition, the fields are green. Thus goat. There will be no shortage of feed for cows.

Quail farming can be done on an integrated farm as poultry can be profitable. 200 square feet is enough to raise 1000 quail chicks. This will earn you up to Rs 40,000 per month.

Once the crops are harvested, the water in the farm can be filtered and the grown fish can be sold.

This will help the farmers to make good profit and the country’s food production will be self-sufficient.

You should know that it is not mandatory for the government to get permission to start small scale farms.

You should know that it is not mandatory for the government to get permission to start small scale farms.

Most people do not realize that only integrated farming can make a profit
It takes hard work and skill. We don’t need anyone else’s help

Thanks.
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!