Friday , October 22 2021

ஆடுகளைத் தாக்கும் நோய்களும் அதற்கான தீர்வும்

Share This

#ஆடுகளைத்_தாக்கும்_நோய்களும்_அதற்கான_தீர்வும்
🌳🌾🌿☘️🌳🌾🌿☘️🌳🌾🌿☘️🌳🌾🌿☘️🌳🍁🍃🍂
🐑🐐🐏🐑🐐🐏🐑🐐🐏🐑🐐🐏🐑🐐🐏🐐🐏🐑🐐🐏

☘️1 #ஆட்டு_சோர்வாதம்
நரம்புத் தொகுதியை பாதிக்கும் இந்த நோய் மாடுகளிலிருந்து நுளம்பினால் ஆடுகளுக்கு பரப்பப்படுகின்றது

#அறிகுறிகள்
*உடல் தள்ளாடுதல் மது அருந்தியவன் போல் நடத்த
*உடலின் பிற்பகுதி பலவீனம் அடைந்து அடிக்கடி கீழே விழுதல்
*கண்விழி கட்டுப்பாடின்றி அசைதல்

#சிகிச்சை
* 20 கெற்றருசான் (heterazan) குடிசைகளை ஒரு நாளைக்கு ஒரு தடவை யாக மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்
உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும்
*உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள கால்நடை வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்

#தடுப்புமுறை
*உங்கள் பண்ணையில் ஆடுகளையும் மாடுகளையும் வெவ்வேறாக குறிப்பிட்ட தூர இடைவெளியில் வளர்க்க வேண்டும்
*நுளம்பு அதிகமான நாட்களில் கடாக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக 1 நாள் மட்டும் 15 கெற்றருசன் குடிசைகளை கொடுக்கவும்
*முடிந்தவரை உங்கள் பண்ணையில் நுளம்புகளை கட்டுப்படுத்தவும்

☘️ 2 #தொடுகை_கொப்புளதோல்_அழர்ச்சி
வாய்ப் பகுதியிலும் உதட்டிலும் ஏற்படும் வைரஸ் நோயாகும்
விலங்குகள் இந்நோயினால் இருப்பதில்லை ஆனால் உணவு உண்ண முடியாமல் இருக்கும்

#அறிகுறிகள்
*சிறிய புண்கள் முளைகள் போன்ற அமைப்புகள் வாய் பகுதியில் காணப்படும்
*வாய் பகுதியில் துர்நாற்றம் வீசும்
*இந்நோயினால் பாதிக்கப்பட்டால் உணவு உண்ணாமல் பசியின்றி இருக்கும்

#கட்டுப்படுத்துதல்
*நோய் ஏற்பட்ட ஆடுகளை தனிமைப்படுத்துதல்
*துப்பரவாக பஞ்சினால் புண்களை மூடியுள்ள அயரை அகற்றி மென்மையான தொற்று நீக்கி பூசவும்(ஜென்சன் வயலற். அயோடின்)
*ஸ்ரெப்ரோ பென்சிலின் ஊசி போட்டு துணை தொற்று வராமல் பாதுகாக்கவும்

☘️3 #தோல்_நோய்
ஆடுகளுக்கு பொதுவாக ஏற்படும் நோயாகும் இது சிற்றுண்ணிகளால் ஏற்படுகின்றது

#அறிகுறிகள்
*சொரிதல்
*முடி உதிர்தல்
*தோல் முலைகளும் கொப்புளங்களூம் தோன்றுதல்
*தோல் தடிப்பாக மாறுதல்

#சிகிச்சை_முறை
*நெகுவன் (nrguvon) 15g எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து உடம்பில் பூச வேண்டும்
*மலத்தின் கரைசல் 5 வீதம் பூசலாம்
*கால்நடை வைத்தியரின் அறிவுரையை கேட்கவும்

☘️4 #நியூமோனியா
விலங்குகள் திகப்பிற்குள்ளாகும் போது சுவாசப்பை நோய் ஏற்படும்
உதாரணம்; காலநிலை மாற்றங்கள் இடத்திலிருந்து இடம்பெயர்ந்த பின் இது இளம் குட்டிகளிலும் பலவீனமான விலங்குகளிலும் கூடுதலாக ஏற்படும்

#காரணிகள்
வைரஸ்.பக்ரீரியா. ஒட்டுண்ணிகள்

#அறிகுறிகள்
*சுவாசிக்க கஷ்டப்படுதல்
*காய்ச்சல்
*இருமல்
*மூக்கிலிருந்து சளி வடிதல்

#சிகிச்சை
*கால்நடை வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவும்
*விலங்குகளை உலர்வான சூடான இடத்தில் விட்டு நன்றாக உணவு கொடுத்தல்

#கட்டுப்படுத்துதல்
*சிறந்த கொட்டில் அமைப்பு
*சிறந்த யோசனை
*உலர்வான நிலம்
*மழை நாட்களில் தொழுவத்தில் நான்கு பக்கமும் சாரல் அடிக்காமல் பார்த்துக் கொள்ளல்
*குட்டிகளுக்கு தனியான கூடுகள் அமைத்து பணி தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்
*கொட்டிலின் விடை வலிக்கு ஏற்றால்போல் ஆடுகளை வளர்த்தல்

☘️5 #கொக்சிடியோசிஸ்
புரோட்டோசோவா ஒட்டுண்ணியினால் ஏற்படும் எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும் நோயாகும். இது ஆறு மாதத்திற்கு உட்பட்ட குட்டிகளில் இதன் பாதிப்பு அதிகமாகும்

#அறிகுறிகள்
*வயிற்றோட்டம் (இத்தம் கலந்த)
*முன்னுரை குறைதல்
*மெலிதல்

#சிகிச்சை
*சல்வா கூட்டுகள். சல்பாடிமின் ஒரு நாளைக்கு 3 குடிசை வீதம் மூன்று நாட்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்
*கால்நடை வைத்திய இடம் ஆலோசனை பெற வேண்டும்

#கட்டுப்படுத்துதல்
*தொழுவதையும் நிலத்தையும் ஒழுங்காக துப்பரவு செய்தல்
*உணவு நீர் தொட்டிகளில் ஆட்டுப் புழுக்கைகள் படாமல் இருக்க வேண்டும்
*குட்டிகளுக்கு இரண்டு மாதத்திலும் மூன்று மாதத்திலும் மேற்குறிப்பிட்ட மருந்தில் 3 தடவை 1 குலிசை வீதம் கொடுக்கவும்

☘️6 #காற்றூதுதல்_or_வாய்வூதுதல்
ஆசையூண் வயிற்றில் அதிகமான காற்று நிரம்புவதால் ஏற்படுகிறது. இது உணவூட்டலில் ஏற்படும் பிள்ளைகளினால் ஏற்படலாம் உதாரணம்; (வளம் கூடிய பசும்புல் அதிக அளவில் கொடுப்பதால் அல்லது புதிதாக வளர்ந்த பசும்புல். இலை குழைகளை உண்ணுவதால்)

#அறிகுறிகள்
*சுவாசிக்க கஷ்டப்படுதல்
*வயிறு வீங்கி காணப்படுதல்
*வயிற்றுப்பகுதியில் தட்டும்போது மேளம் போன்று சத்தம் கேட்கும்

#கட்டுப்படுத்தவும்_சிகிச்சையும்
*வெட்டும் புல் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்
*பாதிக்கப்பட்ட ஆடுகளை உடனடியாக. பின்னங் கால்களை விட முன்னங்கால்கள் 10cm உயரத்தில் இருக்குமாறு நிலம் சரிவாக இருக்கும் இடத்தில் நிறுத்த வேண்டும். காரணம் பாதிக்கப்பட்ட ஆட்டின் நெஞ்சறையில் அமுக்கத்தை குறைத்து சுவாசத்தை சுலபமாக்கும்
*கொஞ்சம் கொஞ்சமாக கைகளால் அழுத்தி காற்றை வெளியேற்றுதல்
*நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர் கொடுக்கலாம்
*கடுமையாக பாதிப்பு ஏற்பட்டால் #Trocar அல்லது #canula செலுத்தி காற்றை வெளியேற்ற வேண்டும்
*உடனடியாக கால்நடை வைத்தியரிடம் ஆலோசனை பெறவும்

#குறிப்பு
ஆடுகளுக்கு 6 மாதத்திற்கு ஒரு தடவை தவறாமல் குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும்
தவறாமல் இவ்வாறு செய்வதனால் ஆடுகளுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!