Friday , October 15 2021

ஆயர்சையர் பசு பற்றிய தகவல்

Share This

#ஆயர்சையர்_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

ஆயிர்சையர் மாடு என்பது ஒரு ஐராப்பிய கறவை மாடு ஆகும். இவை தென்மேற்கு ஸ்கொட்லாந்தின்ஆயிர்சையர் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவை. தோன்றிய இடத்தின் பெயரால் இவை அழைக்கப்படுகின்றன.

வயது வந்த ஆயிர்சையர் மாடு 450 முதல் 500 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும். இந்த மாடுகள் பொதுவாக சிவப்பு நிறத்தோடு வெள்ளை திட்டுக்களோடு இருக்கும். சிவப்பு நிறம்கொண்டு அதில் அடர் பழுப்பு ஆரஞ்சு திட்டுகள் கூட இருக்கும்.

இந்த வகை பசுக்கள் வெப்ப வலயங்களில் வாழ தகுதியற்றது ஆகையால் வெப்ப வலயங்களில் உள்ள அதிகமான பண்ணையாளர்கள். பால் உற்பத்திக்கு இந்த மாடுகளை தேர்வு செய்வதில்லை.

இந்த பசுக்களை பொறுத்தவரை பராமரிப்பு செலவு மிக அதிகம்
பால் உற்பத்தியில் ஜெர்சி பிரிசியன் போன்று இல்லாமல் குறைந்த அளவே பால் உற்பத்தி ஆகின்றது.

இவை மிகுந்த சுறுசுறுப்பான மாடுகளாக இருப்பதால் இவற்றை மேலாண்மை செய்வது கடினம்.
பண்ணையாளர்கலோடு இந்த வகை பசுக்கள் பழகிக் கொள்வதற்கு மிக நீண்ட நாள் எடுக்கும்.

இந்த மாடுகளின் பாலின் கொழுப்புச்சத்து மற்ற மாட்டினங்களை போலவே (4%) இருக்கும். இந்த மாட்டினம் டன்லப் மாடு அல்லது கன்னிங்காம் மாடுஎன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

பிறந்த 26-30 மாதங்களில் சினைப்படுத்தலுக்கு தயாராகும்.
மீண்டும் 14 மாத இடைவெளியில் அடுத்த கன்று ஈனும்.
ஆயர்சையர் பசுக்கள் ஒரு நாளைக்கு 10 – 14 லிட்டர்வரை பால் தரும்.

ஒரு சில பண்ணைகளில் இந்த வகை மாடுகளில் ஓரிரு மாடுகளை அழகிற்காக வளர்த்து வருகின்றனர்.

நம் நாட்டில் உள்ள பண்ணையாளர்கள் இந்த வகை மாடுகளை கொள்வனவு செய்ய நினைத்தால்.
அது ஒரு தவறான பண்ணை முகாமைத்துவ நடவடிக்கையாக கருதப்படும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm..

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!