Friday , October 15 2021

இயற்கை கிருமிநாசினி தயாரிப்பது எப்படி

Share This

#இயற்கை_முறையில்__கிருமிநாசினி_தயாரிப்பது_எப்படிLF
🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿

மிகக் குறைந்த செலவில் எனக்கு அருகில் உள்ள இலை தழைகளை வைத்து
இயற்கையான முறையில் கிருமி நாசினியை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

பொதுவாகவே இக் கிருமி நாசினி உற்பத்தி செய்வதற்கு. உடைத்தால் பால் வரக்கூடிய இலைகளும் அதோடு ஆடுகள் சாப்பிடாத இலை தழைகளையும் பயன்படுத்த முடியும்

ஆவாரை, வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி. ஆமணக்கு. ஊமத்தை. காட்டு பாகை.இவற்றில் ஏதாவது 5 அல்லது 6 இலைகள் இருந்தால் போதும்.

இவ் இலைகளை தலா 1 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து, இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி மூடி வைத்து 14 நாட்கள் தினமும் கலக்கி வர வேண்டும்.

இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் வாசனையுடைய 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு அல்லது வேப்பம் விதை. மற்றும் 15 g பெருங்காயத்தினையும்
நன்கு இடித்து மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரில் கலந்து 14 நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும்.

இச்செய்முறையை நன்கு நிணல் விழக்கூடிய இடத்தில் செய்து வைத்து தினமும் கலக்கி விட வேண்டும்.

7 நாள் கழிந்த பின் இதனுழ் தெறி புழுக்கள் போன்ற சிறிய சிறிய புழுக்கள் உருவாவதற்கும் வாய்ப்புள்ளது.
இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை
இதனை நன்கு வடிகட்டி இதில் பெறப்படும் நீர் மட்டுமே எமக்கு தேவை.

பிறகு இரண்டு கரைசல்களையும் நன்கு வடித்து ஒன்றாகக் கலந்து.. 7 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.

இது, அதிகளவான பீடைகளை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும்.
இம்மருந்தினை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

மேல் குறிப்பிட்ட இலைகளை படத்தில் சேர்த்துள்ளோம்.

அதோடு அனுபவமுள்ள விவசாயிகள் இக்கரைசலை பயன்படுத்தும்போது பயிர்களில் ஏற்படும் மாற்றத்தினை அடிப்படையாக வைத்து இக்கரைசலின் வீரியத்தை கூட்டுவதா அல்லது குறைப்பதா என்று அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!