Friday , October 22 2021

இயற்கை முறையில் களைநாசினி தயாரிப்பது எப்படி

Share This

#இயற்கை_முறையில்_களைநாசினி_தயாரிப்பது_எப்படிLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌳🍁🍀🍂🌿🌳

நீங்கள் இயற்கை முறையிலான பயிர் வளர்ச்சி ஊக்கி( ஜீவாமிர்தம்) தயாரிப்பதை பார்த்திருப்பீர்கள் அதோடு இயற்கை முறையிலான பூச்சி விரட்டி தயாரிப்பதனையும் பார்த்திருப்பீர்கள்

ஆனால் இது பயிர்களோடு சேர்ந்து வழரும் ஏனைய செடிகளை அழிக்கும் களைநாசினியாகும்.
ஆம் ஒரு சில நண்பர்கள் இயற்கை முறை களைநாசினி பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.

இக்கலவை களைகளைக் கொல்லும்.
அதோடு பயிர்களில் இதை தெளித்தால்
பயிர்களும் கருகிப்போகும்.

இது பயிர்களுடன் வளரும்
ஏனைய களைசெடிகளுக்கும் மட்டும். பயிர்களில் படாதவாறு பயன்படுத்த வேண்டும்.

அதோடு மண்டிக் கிடக்கும் அல்லது பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.

இதனை எந்த நிலத்தில் பயன்படுத்தினாலும் இதன் நச்சுத்தன்மை அந்த நிலத்தில் ஓரிரு வாரத்திற்கு மட்டுமே இருக்கும்.
அதோடு எம் நிலத்தை நம் முன்னோர்கள்
எவ்வாறு ஒப்படைத்தார்களோ அதேபோன்று ரசாயன அற்ற நிலமாக எம்மால் மாற்ற முடியும்

10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.

தண்ணீர் – 3 லிட்டர்,
சுண்ணாம்பு கல் – 2 kg
கோமியம்(மாட்டு சிறுநீர்) – 3 லீட்டர்
பச்சை தன்மையுள்ள வேப்பம்விதை – 0.5 kg
பாலுள்ள எருக்கு இலை – 0.5 kg
உப்பு – 2 kg

#செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 12 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் கோமியத்தை ஊற்றி இதோடு உப்பு மற்றும் வேப்பம் விதை, எருக்கு கலையினை நன்கு சட்னி போன்று அரைத்து எடுத்து கோமியத்தோடு நன்கு கலக்கி 12
மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.

பின்பு இந்த இரு கரைசலையும் நன்கு வடிகட்டி எடுத்து
இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலக்கி 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும்.

பின் இந்தக் கரைசலை ஒரு மணி நேரம் வைத்திருந்து பின் ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டு அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

இக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடாது.
இக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.

இக்களைநாசினி நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகையால் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்ணில் படாதவாறு பாதுகாப்பாக ஒரு கொள்கலனில் அடைத்து வைக்கவும்
இக்கரைசலை 3 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!