Friday , October 22 2021

இலுப்பை மரத்தின் பயன்கள்

Share This

#இலுப்பை_மரத்தின்_பயன்கள்
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது.

இலுப்பையின் தாயகம் தென் இந்தியா, நேப்பாளம், இலங்கை, மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது.
இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.

இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல்.
சுமார் 80 அடி வரை வளரக்கூடியது.

இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது.

இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து 7 வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.

“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை” என்பது பழமொழி.

ஒரு வருடத்திற்கு 100 கிலோவிலிருந்து 500 கிலோ பூவும், 100 முதல் 1000 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம்.

ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம்.
இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியமான எண்ணெய் ஆகும்.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல் மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு , காயம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும்.

விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் 64 இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு 6400 லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக 40 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஆண்டுகள் செல்லச் செல்ல இதன் லாபம் இன்னும் அதிகரித்துக் கொண்டு செல்லும்.
இது தவிர பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.

இவ்வுலகிலுள்ள பல நீண்ட காலப் பயிர்களுக்கு மத்தியில். இலுப்பை பயிற்சிகளில் மட்டுமே. நாம் மட்டுமல்லாமல் நமது தலைமுறையில் பத்து தலைமுறை வரை அறுவடை செய்து லாபம் ஈட்டலாம்.

கேட்பதற்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம் ஆனால் இதுதான் உண்மை.
இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது.

வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.

இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.

வவ்வாலின் அழிவு புளம்பு, கொசுவின் வளர்ச்சி.

நுளம்பின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,
சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!