Friday , October 22 2021

எள் பயிற்செய்கை

Share This

#லாபம்_தரும்_எள்_பயிற்செய்கை
☘️🌾🍃🌳☘️🌾🍃🌳☘️🌾🍃🌳☘️🌾🍃
🍑🌶️🍅🍋🌽🍎🍑🌶️🍅🍋🌽🍎🍑🌶️🍅

#இயற்கை_முறை_செய்கை
எள், மணல் கலந்த நிலத்தில் நல்ல விளைச்சல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.

அனைத்துப் மாதங்களும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு 15 நாட்களுக்குள் இரண்டு உழவு செய்ய வேண்டும்.

நிலம் புழுதியான பிறகு, பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும். ஏக்கருக்கு அரைகிலோ விதை எள் தேவைப்படும். காற்றடிக்கும் போது எள்ளை விதைக்கக் கூடாது. அப்படி விதைத்தால் மொத்த எள்ளும் ஒரே இடத்தில் போய் விழுந்துவிடும்.

அரை கிலோ விதை எள்ளுடன், ஒன்றரை கிலோ மிருதுவான மணலை கலந்து தூவலாம் தூவிய உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில், எள்ளை எறும்பு தின்ன ஆரம்பித்து விடும்.

அதற்கு பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. செடி இரண்டு அங்குலம் வளர்ந்த பிறகு 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை. பாசனத்துடன் கலந்து பயிருக்குக் கொடுக்க வேண்டும்.

15-ம் நாள். களை எடுக்க வேண்டும். களை எடுத்த 5 நாள் கழித்து ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். அதேபோல 30 முதல் 35-ம் நாளுக்குள் இரண்டாம் களையெடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு பாசனம் செய்யும்போது, அதில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து கொடுக்க வேண்டும்.

40-ம் நாள், 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் இலைசுருட்டுப் புழுத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம்.
எந்தப் பூச்சி விரட்டியாக இருந்தாலும் சரி காலை வேளையில் தெளிக்க கூடாது.

அதற்கு பிறகு அதிக பராமரிப்பு தேவையில்லை. 40-ம் நாளுக்கு மேல் பூ பூக்கும் தருணத்தில் ஜீவாமிர்தமும், பூச்சிவிரட்டியும் பயன்படுத்துவதால் விளைச்சல் பாதிக்காது. 70-ம் நாள் பயிர், பழுப்பு நிறத்தை அடையும். 90-ம் நாள் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

அறுவடை செய்த பயிர்களை வயலிலே 2 நாட்கள் பரப்பி வைக்கவேண்டும். பிறகு, ஒரு பொலித்தீன் மேல் தனித்தனியே பிரித்து வெயிலில் காய வைத்தால், எள் மட்டும் தனியே கொட்டிவிடும். இதுபோன்று மூன்று நான்கு முறை செய்தால், அனைத்து எள்ளும் செடியை விட்டு தனியாக வந்துவிடும்.

#அறுவடை_அறிகுறி :
1. எள் செடியின் கீழ் பகுதியிலுள்ள 25 சதவீதம் இலைகள் உதிர்ந்து விடும், மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறியிருப்பின் அறுவடையை தொடங்கிவிடலாம்.

2. எள் காய்கள் பாதியளவு மஞ்சள் நிறம் அடைந்து விட்டால் பயிர் அறுவடை செய்திட ஏற்ற பருவம் ஆகும். வெள்ளை எள் பயிருக்கு எள் விதை வெள்ளை நிறம் அடைய வேண்டும்.

3. எள் பயிரின் கீழ் பகுதியிலிருந்து பத்தாவது காயை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் கருப்பு நிறமாக மாறியிருந்தால் அறுவடை செய்து விடலாம். இது கருப்பு எள் விதைக்கு மட்டும் பொருந்தும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!