Friday , October 22 2021

கத்தரி பயிற்செய்கை முறை

Share This

#கத்தரி_பயிற்செய்கை_முறைLF
🌳🍂☘️🍁🌿🌳🍂☘️🍁🌿🍂☘️🍁🌳

விவசாயிகள் தற்போதைய பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான கத்தரிக்காயை பயிர் செய்து அதிக லாபம் பெறலாம்.

கத்தரி பயிற்செய்கை ஆனது சொட்டு நீர் பாசன முறை, மற்றும் தூவல் பாசன முறைமூலமே அதிக லாபம் கிடைக்கின்றது

இறவை முறையில் பயிர் செய்யும் நண்பர்கள் அதிகளவான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள்.

இறவை முறையில் அதிக அளவில் நீர் தேங்கி நிற்பதால் செடிகளில் வேர் அழுகல் ஏற்பட்டு இறந்து விடுகின்றது.
அதோடு நீர் தேங்கி நிற்பதனால் செடிகளைச் சுற்றி அதிகளவான சிறு எறும்புகள் செடிகளில் தங்கிவிடுகின்றது.

கத்தரிச் செடி மட்டுமல்ல வேறு எந்த பயிராக இருந்தாலும் செடிகளுக்குத் தேவையான அளவு நீரை மட்டுமே நாங்கள் கொடுக்க வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

#பயிரிடும் காலம்
நாள் தோறும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ள காய் கத்தரி. இதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயரிடலாம்.

#மண்ணின் தன்மை
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்தரி பயிரிட ஏற்றதாகும்.

விதை நேர்த்தி: ஒரு ஏக்கருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

#இடைவெளி, செடி எண்ணிக்கை
பொதுவாக கத்தரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் ரெட்டை வரிசை முறையில் இரண்டு அடி இடைவெளியில் நட வேண்டும்.

அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 1 1/2 அடி இடைவெளியில் நட வேண்டும்.

#நடவு முறை
நாற்றுக்களை நடுவதற்கு முன்பு 8 முதல் 12 மணி நேரம் உயர் பாத்திகளை சொட்டு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி நன்கு நனைக்க வேண்டும். நாற்றுக்களை மேற் குறிப்பிட்ட இடைவெளியில் நட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்துக்குப் பின்பு இடைவெளி இருப்பின் அங்கு புதிய நாற்றுக்களை நடலாம்.

#நீர்ப் பாசனம், நீர்வழி உரமிடல்
தினமும் சொட்டு நீர்ப் பசான முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை சொட்டு நீர்ப் பாசனத்துடன் தொட்டியின் மூலம் இட வேண்டும்.

#பின்னால் செய்ய வேண்டிய நேர்த்தி
நடவு செய்த 30-வது, 60-வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.

#அறுவடை,
மேற்கண்ட முறைகளை விவசாயிகள் கையாண்டால் 50 முதல் 120 நாள்கள் வரை அறுவடை செய்யலாம். வீரீய ஒட்டு ரகத்தில் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை விளைச்சல் கிடைக்கும். கத்தரி அறுவடை ரகத்திற்கேற்ப நாள்கள் மாறுபடும்.

கத்தரி செடியை பொறுத்தவரை எந்தவொரு ரசாயனமும் அல்லாமல் முற்றுமுழுதாக இயற்கையான முறையில்.
இயற்கை கிருமிநாசினி, இயற்கை உரம், இயற்கையான பயிர் வளர்ப்பு ஊக்கி போன்றவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்து கொள்ள முடியும்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!