Thursday , October 14 2021

கன்று போட்ட பின்பு பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

Share This

#கன்று_போட்ட_பின்பு_பசுக்களுக்கு_ஏற்படும்_பாதிப்புகள்LF
🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

கன்று போட்டு நான்கு ஐந்து நாட்கள் கழித்து மாடு படுத்துவிட்டால் எழுந்து நிற்க முடியாமல் படுத்தே இருக்கும்.

இடுப்பு பகுதி உணர்ச்சி குறைவாக இருக்கும். பால் காய்ச்சல் எனக்கருதி கால்சியம் குளுகோஸ் மருந்துகள் போட்டாலும் மாடு எழுந்து நிறகாது. ஆனால் தீவனம் தின்னும்.

இப் பிரச்சனை பல பண்ணைகளிலும் உள்ளது ஆனால் இதற்கான தீர்வு என்னவென்று அதிகமான நண்பர்களுக்கு தெரியாது.

இதற்கு காரணம் மாடு கன்று ஈனும் போது வழக்கத்தை விட இடுப்பு எலும்பு (hip joint) விரிவடைந்து விடுவதே.

கன்றின் எடை 25 கிலோவிற்கு மேல் இருக்கும் மாடுகளில் இந்த குறைபாடு இருக்கும்.

மேலும் சத்து குறைபாடு;
இடுப்பு பகுதி நரம்பு மற்றும் இரத்தக்குழாய் கசங்குதல் மற்றும் சவ்வு பிரச்சினை அனைத்தும் இருக்கும்.

இதற்கு நான் படத்தில் காட்டியபடி மாட்டை தூக்கி நிறுத்தி கட்டி அப்படியே 4,5 நாட்களுக்கு விடவேண்டும்.

அதிகப் புரதச் சத்து உடைய தீவனத்தினை கொடுக்கலாம் இவற்றுடன் கால்சிய பவுடர், வைட்டமின் திரவ டொனிக் கொடுக்கலாம்.

கூடவே நாயுருவி; அகத்தி மற்றும் முருங்கை இலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

மேல்பூச்சாக நாங்கள் கூறும் சிகிச்சையை செய்யுங்கள்… மாடு கண்டிப்பாக கசாப்புக்கு போகாது…

பிரண்டை இரண்டு கிலோ ; கருவேலன் மரப்பட்டை அரை கிலோ எடுத்து நன்றாக உரலில் கூழ்பதத்தில் இடித்து எடுத்துக் கொண்டு இத்துடன் அரைகிலோ பயறுமாவு, கட்டிகள் இல்லாது அரைத்த புற்று மண் அல்லது களிமண் அரைகிலோ இவற்றை ஐந்து லிட்டர் தண்ணீரில் கலந்து சட்டியில் வைத்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கிண்டி கொதி நிலை வந்ததும் இறக்கி வைத்து இளம் சூட்டில் ஐந்து கோழி முட்டை வெள்ளை கருவை ஊற்றி கலந்து இந்த மருந்து கலவையை ஆறிய பின் எடுத்து மாட்டின் இடுப்பு பகுதி கால் சப்பை மற்றும் முன் கால் சப்பைகளில் மொத்தமாக பூச வேண்டும்.

இதுபோல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட வேண்டும்.
கிடையாக கிடந்த மாடு கூட எழுந்து நடக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!