Friday , October 22 2021

கருங்கோழி பற்றி பல புரளிகள் சமூகவலைத்தளங்களில் பரவுகிறது ஆனால் இதுதான் உண்மை

Share This

#கருங்கோழி_பற்றி_பல_புரளிகள்_சமூகவலைத்தளங்களில்_பரவுகிறது_ஆனால்_இதுதான்_உண்மைLF_
🐓🦃🦆🐓🦃🦆🐓🦃🦆🐓🦃🦆🐓🦃🦆
☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿

கருங்கோழி அல்லது நாட்டுக்கருப்புக் கோழி, கடக்நாத் கோழி (Kadaknath) போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இதை வட இந்தியாவில் பூர்வீகமாக காணப்படும் கோழியாகும்.

இக்கோழிகள் தென்னிந்தியாவில் பல இடங்களில் இருந்தாலும்
இது அதிகளவாக வாட இந்தியாவில்தான வாளர்க்கப்படுகின்றது.

அதிக லாபம் தரும் தொழில்களில் கருங்கோழி வளர்ப்பு ஒன்று.
காரணம் இக் கேழி மிககுறைந்த அளவிலேயே கிடைக்கிறது.
நாட்டுகோழிகளை விட கருங்கோழிகள் மூன்று மடங்கு அதிக சத்துக்கள் நிறைந்ததாகும்.
காரனம் இதன் இரத்தத்தில் மெலோனின் என்ற நிறமிப்பொருள் அதிகமாக உள்ளதாகும்.

கருங்கோழி வளர்ப்பில் ஈடுபாடும் நண்பர்கள் கவனிக்க வேண்டிய விடையங்கள்.

1. கோழிகள் கறுப்பாக இருந்தால் போதாது
கோழிகள் முடிகளை விலக்கி பார்க்கும்போது உடல் பகுதி கருமையாக இருக்க வேண்டும்,

2. தலைப்பகுதி வாளமையான சிவப்பு நிறத்தில் இல்லாமல் கருமையாக இருக்க வேண்டும்.

3. இக் கோழியின் கண் பகுதி அடர் கருப்பு நிறமாக இருக்க வேண்டும்

4. இக்கோழியின் வாயின் உற்பகுதி நாக்கு உட்பட மிக கருமையாக இருக்கவேண்டும்.

5. கலப்பில்லாத கருங்கோழியின் முட்டையை உடைத்து பார்த்தாலும் முட்டையின் மஞ்சள் கருவானது எண்ணை கலந்த மஞ்சளாகவும் கருமை கலந்த மஞ்சளாகவும் இருக்கவேண்டும்.

இவை இந்திய மத்தியப் பிரதேச மாநிலக் காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, “கடக்நாத்’ என்றழைக்கப்படும் கோழியினமாகும்.

இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன.

இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்.

ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது… கொலஸ்ட்ரால், 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம். இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன.

மத்தியப் பிரதேசம், மராட்டியம், தில்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சிக்காக வளர்க்கின்றனர்,

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது. சீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில் குஷ்ரம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாதம் போன்ற நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். முற்காலத்தில் ஆண்களுக்கு வீரியத்தை அதிகரிக்க, சில மூலிகைகளுடன் சேர்த்துச் சமைத்த கருங்கோழிக் குழம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பெருங்காயம், மிளகு, பிரப்பங் கிழங்கு எனப் பல மருத்துவ மூலிகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் கருங்கோழி சூரணத்தால் விக்கல், குட்ட நோய்கள், மூலம், வாயு நீங்கும் என்பதற்கான பாடல் குறிப்பு உண்டு,

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!