Saturday , October 23 2021

கறவைமாடுகளில் அதிகபால் சுரக்க வைப்பது எப்படி

Share This

#கறவைமாடுகளில்_அதிக_பால்_சுரக்க_வைப்பது_எப்படிLF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳

அதிக பால் உற்பத்தி மூலம் நல்ல இலாபம் பெற கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளலாம்.
கறவை மாடுகளு்குத் தீவனம் மிக முக்கியம். அதிலும் நிறைய பசுந்தீவனமே முக்கியம்.

உலர் தீவனம் (வைக்கோல்) கொடுக்கலாம்
ஆனால் பால் உற்பத்திக்கு உலர் தீவனம் சிறந்தது இல்லை.

நீங்களும் நன்கு உனர்வீர்கள் பச்சை புல்லுக்கு ஈடு ஏதுமில்லை

கறவை மாட்டின் தீவனம் குறைந்தால் உடனே பால் சுரக்கும் அளவு குறையும். எனவே அதிகமாக கறக்கும் மாடுகளுக்கு சிறந்த பச்சை புல் வகைகள் (ஏதுவாயினும்)
அதோடு கலப்புத் தீவனமும் அளிக்க வேண்டும்.
பால் சுரப்பில் கட்டாயம் மாற்றம் ஏற்படும்.

கறவை மாடுகளை மென்னையாகக் கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும்

கன்று ஈண்ட 40 வது நாளிலேயே அதன் சூடு வெளிப்படும். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கேற்றவாறு பராமரிக்க வேண்டும்.
சினை பிடித்து கரு அழிந்தாலும்.
மீண்டும் சரியான நேரம் பார்த்து அடுத்த கருத்தரிப்புக்குத் தயார் செய்தல் வேண்டும்

பால் உற்பத்தி அளவை ஒவ்வொருமுறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தி திறனை அறிந்துகொள்ள உதவும்
ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் தனித்தனிப் பதிவேடுகள் அவசியம்

கலப்பு தீவனத்தை பால் கறக்கும் முன்பும் அடர் தீவனத்தோடு உலர் தீவனமும் பால் கறந்த பின் அளித்தல் சிறந்தது.
ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும்.
நாலொன்றுக்கு 40 லீற்றருக்கும் அதிகமாக நீர் குடிக்கும்

தினசரி பால் கறப்பது அவசியம் ஆகும்.
ஒரு நாளைக்கு 2 முறை கறப்பது பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால். அதிக பால் சுரப்பதைக் குறைக்கிறது

முடிந்தவரை முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும். இரண்டு விரல் (பெரு விரல் அல்லது ஆட்காட்டி கொண்டு கறப்பது சீராக இல்லாமல் காம்புகளில் அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் காம்பில் வலி உண்டாகிறது.

கன்று ஊட்டாமலேயே பசு பால் (சுரக்குமாறு) கறக்குமாறு பழக்க வேண்டும். அப்போதுதான் கன்றைப் பசுவிடமிருந்து விரைவில் பிரிக்க முடியும்

திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கறவை மாடுகள் சுதந்திரமாக உணர வைக்கும்.
வெயில் காலத்தில் கட்டாயம் ஒவ்வொரு நாளும் பசு மாடுகளில் பால் கறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் நாளாந்தம் பால் உற்பத்தியாகும் விதம் அதிகரிக்கும்

அதோடு தினசரி எருமை மற்றும் பசு மாடுகளை குளிப்பாட்டினால் உதிர்ந்த முடியை நீக்க உதவும்

ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அதை அறிந்து நீக்குதல் வேண்டும். உதாரணமாக அடிக்கடி உதைத்தல், நக்குதல் போன்றவை இருப்பின் அதன் காரணத்தை அறிந்து சரிசெய்ய வேண்டும்

சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படவேண்டும்

ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் அடையாள எண் இட்டு அதன் பால் அளவு கொழுப்புச்சத்து அளவு, உணவு உட்கொண்ட அளவு, கன்று ஈனும் பருவங்கள் பதிவு செய்யப்படவேண்டும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!