Friday , October 22 2021

காங்கிரெஜ் பசு பற்றிய தகவல்

Share This

#காங்கிரெஜ்_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

இந்திய நாட்டு பசு இனங்களில் வித்தியாசமான ஒரு இனம் என்றால் அது காங்கிரெஜ் வகை தான்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை தாயகமாக கொண்டவை. மற்ற இந்திய நாட்டு இனங்களை விட உருவத்தில் பெரியவை .

அதோடு இதன் தோற்றத்துக்கும் இதன் குணாதிசயத்துக்கும் சம்பந்தமில்லை.
மிக சாதுவான குணம் கொண்டவை. அகலமான மற்றும் பருத்த கொம்புகள் உடையவை அனேகமாக வெள்ளை மற்றும் கருப்பு கலந்த சாம்பல் நிறத்தை பெற்றுள்ளன கருப்பு நிறத்தில் சில இருக்கின்றன . பிறந்த கன்றுகள் அனேகமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இதனால் தான் வெப்பத்தை நன்கு தாங்குகின்றன . மற்ற இனங்களை விட மிக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடையவை . அதிக உடல் வலிமை பெற்றுள்ளதால் மிக கடினமான விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த படுகின்றன.
திடமான திமில் உடையவை.
இது 400 தொடக்கம் 450 kg வரை வளரக்கூடிய தாகும்.

இதில் காளைகளை பொருத்தவரை இன்னும் அதிகமாக வரக்கூடியதாக இருக்கும் மிகப்பெரும் தோற்றம் உடையதாகவும் 5000 கிலோ உள்ள பாரத்தினையும் இலகுவில் இழுத்துச் செல்லக் கூடியதாகவும் இருக்கும்.

பிறந்த கன்றுகள் சுமார் 30 மாதங்களில் பருவ வயதை அடைகின்றன.
இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள்.
சுமார் 12 கன்றுகள் வரை ஈனும்.
பற்கள் தேய்ந்து விட்டால் எந்த கால்நடைகளுமே சினை பிடிக்கும் வாய்ப்பு மிக குறைவு .

மனிதர்களுடன் நன்கு பழகும் தன்மை கொண்டவை . நம் அசைவுகளை நன்கு புரிந்து கொள்ளும். பால் கறப்பது எளிது . அதாவது முரண்டு பிடிப்பது இல்லை .

நாம் அளிக்கும் தீவனத்தை பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் 8 முதல் 12 லிட்டர் பால் சாதாரணமாக கறக்கும். மடி சம்மந்தப்பட்ட நோய்கள் மிக குறைவு . அதேசமயம் தொழுவம் சுத்தமாக இருப்பது அவசியம். உண்ணிகள் போன்றவற்றின் தாக்குதலை தவிர்க்கலாம் .

தமிழ்நாட்டில் உள்ள காங்கேயம் பசுக்களின் பாலிற்கு நிகரான பால் கொடுக்கக்கூடிய பசுக்கள் என்றால் அது காங்கிரெஜ் தான்.
அதோடு இதன் கொம்புகளில் அபாரவிதமான வளர்ச்சி தான். அதிக சத்துக்கள் நிறைந்த பால் உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றது என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது.

காங்கிரெஜ் பசுக்கள் சாதாரணமாக நம் நாட்டு இனங்களை போலவே கன்று ஈன்ற மூன்றாவது மாத முடிவில் சினைக்கு வரும். சினை பிடித்த பின் சுமார் ஐந்து மாதம் வரை பால் கறக்கலாம். அதன் பின்பு கறவை நிறுத்தி விடுவது நல்லது . சுமார் 100 நாட்கள் பால் கறவை நிறுத்தி விடுவது மாட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!