Thursday , October 14 2021

காங்கேயம் பசு பற்றிய தகவல்

Share This

#காங்கேயம்_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

காங்கேயம் என்பது இந்தியாவில்.தமிழ் நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் விவசாயப் பணிக்காக வளர்க்கப்பட்ட ஒரு வகை நாட்டு மாட்டுஇனம் ஆகும்.

இந்த வகை இனங்கள் இந்தியாவின் பிரசித்தி பெற்ற உள்நாட்டு இனம் ஆகும். தென் இந்தியாவின். குறிப்பாக தமிழ்நாட்டின் அடையாள சின்னமாக
இந்தக் இனங்கள் போற்றப்படுகின்றன.

காங்கேயம் மாடுகளில். காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை.

கடுமையான வெயில், பஞ்ச காலத்திலும் நொடித்து போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை, காய்ந்த இலைகள், வைக்கோல் எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.

காங்கேயம் பசுக்களின் பாலில்உயர்தரமான சத்துக்கள் காணப்படுகின்றது.
பொதுவாகப் பால் உற்பத்தி நேரங்களில் இந்த வகையான இனங்கள் ஒரு நாளைக்கு 2 – 3 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது.
இந்த இனங்கள் குறைந்து கொண்டுவருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

காங்கேயம் பசுப்பாலிற்கு ஈடாக காங்கிரேஜ் பசும்பால் மட்டுமே உள்ளதாகவும்.
வேறு எந்த ஒரு பசுவின் பாளையம் இதனோடு ஒப்பிட முடியாது என கூறுகின்றார்கள்.

காங்கேயம் மாடுகள் பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும், ஆறு மாத காலத்திற்குப் பிறகு சாம்பல் நிறத்துக்கும் மாறிவிடும்.

காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும், திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும்.
பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இவற்றின் கொம்புகள் நன்கு பெருத்த நீண்ட கொம்புகளுடனும். உயரமாகவும் பெருத்த திமிலுடனும் காணப்படும்

காங்கேயம் மாடுகளிலும். நிறங்கள் அடிப்படையாக வைத்து நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
மயிலை (வெள்ளி)
பிள்ளை (வெண்மை)
செவலை (சிவப்பு)
காரி (கறுப்பு)

இதன் எடை 400 -450 கிலோ வரை வளரும்.
பிறந்த கன்றுகள் சுமார் 30 மாதங்களில் பருவ வயதை அடைகின்றன.
இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 18 ஆண்டுகள்.
சுமார் 14 கன்றுகள் வரை ஈனும்.
ஒவ்வொரு கன்றுக்கும் இடையிலுள்ள தூரம் 14 மாதங்கள் வரை ஆகும்.

இந்த பசுக்களில் குறைந்த அளவு பால் உற்பத்தி இருந்தாலும்
நோய் எதிர்ப்பு சக்தி மி அதிகமாக உள்ளது.
இதன் பாலில். நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து அதிகமாகவே உள்ளது

இந்தப் பசுக்களில் 1 லீட்டர் பால் குடிப்பதும் ஏனைய பசுக்களின் பாலில் 3 லீட்டர் குடிப்பதற்கு சமனாகும்

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!