Friday , October 22 2021

காடை முட்டை பற்றிய ரகசியம்

Share This

#காடை_முட்டை_பற்றிய_ரகசியம்LF
🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று
கேட்டாலே, பலருக்கும் முகம்
பல கோணங்களில் செல்லும்.

காடை முட்டை
சாப்பிடுவார்களா என்று
பலரும் கேள்வி எழுப்புவார்கள்.

ஆனால் உண்மையில்
காடை முட்டையில் கோழி முட்டையை விட ஏராளமான
சத்துக்கள் அடங்கியுள்ளன.
காடை முட்டை மிகவும்
சிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன்
காணப்படும்.

மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய
சத்துக்கள் உள்ளது. சிக்கன், மட்டனுக்கு பின், பல
பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான்.
அதிகம் விற்பனையாகிறது.

அதிகமான பார்மசி களிலும் காடை முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றது.

சரி, இப்போது காடை முட்டையை
சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
என்னவென்று பார்ப்போம்.

காடை முட்டையில் வைட்டமின்களும், இதர
சத்துக்களும் உள்ளன,
அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை
முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில்
50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது.

அலர்ஜி தடுக்கப்படும்.
ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன்
உள்ளது.

இது மூளையின் செயல்பாட்டினை
தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது
நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும்
சீராக வைத்துக் கொள்ளும்.

இது புற்றுநோய்
வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக்
பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே
புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு
வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு
குறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு
வாருங்கள். இதனால் உடலில் ஹீமோகுளோபின்
அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக
கர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால்,
உடலில் இரத்தத்தின் அளவை சீராக
பராமரிக்கலாம்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

வளரும் குழந்தைகளுக்கு: தினமும் 2 காடை முட்டையைக்
கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி
சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும்,
நோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும்
இருக்கும்.

இத்தகவல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!