Thursday , October 14 2021

காடை வளர்ப்பு முறை

Share This

#காடை_வளர்ப்பு_முறைLF
☘️🍁🌳🍂🌿☘️🍁🌳🍂🌿☘️🍁🌳🍂

01.மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடையை வளர்க்கலாம்.

02.குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.
காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம்.

03.காடைகளை 5 முதல் 6 வாரங்களில் விற்பனை செய்யலாம்.
04.மிகக் குறைந்த அளவு தீவனம் போதுமானது.

05.காடை இறைச்சியில் அதிக அளவு புரதமும் 22% . குறைந்த அளவு கொழுப்பும் 5% இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாகும்.

06.ஊட்ட சத்து நிறைந்த முட்டை.

#கொட்டகை_அமைப்பு.

•முதல் 2 வாரங்களுக்கு (3×2 1/2×1 1/2 அடி) 100 காடைக்கு போதுமானது

•3 முதல் 6 வாரங்களுக்கு பிறகு (4×2 1/2×1 1/2 அடி) 50 காடைக்கு போதுமானது

•கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5 க்கு 1.5 செ.மீ. உள்ளதாக இருக்க வேண்டும்.

•கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு கூண்டுக்கும் கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தலாம்.

#தீவனப்_பாரமரிப்பு

•காடை தீவனம் மிக சிறிய துகள்களாக இருப்பது மிகவும் அவசியம்.

•ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் தீவனத்தை உட்கொள்ளும்.

•ஆறு வார வயதிற்கு மேல் உள்ள காடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 30-35 கிராம் தீவனத்தை அவற்றின் முட்டை உற்பத்திற்கு ஏற்ப அளிக்க வேண்டும்.

•காடைகளின் தீவன மாற்று திறன் 12 முட்டை இடுவதற்கு 400 கிராம் தீவனம் உட்கொள்கிறது.
தீவனம் தயாரிக்க முடியாத போது, இறைச்சிக் கோழிக்கான ஆரம்பக்கால தீவனத்தை 75 கிலோ வாங்கி அதனுடன் 5 கிலோ பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். தானியத்தின் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒருமுறை அரைத்து தூளின் அளவை குறைத்து உபயோக்கிலாம்.

#காடை_பண்ணை_பாரமரிப்பு_முறைகள்

•6 வார வயதில் பெண் காடைகள் 175-200 கிராம் எடையும் ஆண் காடை 125-150 கிராம் எடையும் இருக்கும்.

•காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பிக்கும். மாலை நேரத்தில் காடைகள் முட்டையிடும்.காடைகள் 22 வது வாரம் வரை முட்டை இடுகின்றன.

•காடை முட்டை எடை சுமார் 9 கிராம் இருக்கும்.
ஆண் காடைகளின் மார்பு குறுகலாகவும், பழுப்பு வெள்ளை நிறமும் கலந்து ஒரே சீராக இருக்கும்.

நான்கு வாரங்களுக்கு பிறகே ஆண், பெண் காடைகளை இனம் கண்டறிய முடியும்
முட்டைக்காக காடைகள் வளர்க்கும்போது 4 வது வாரத்திலேயே ஆண் காடைகளை பெட்டை காடைகளிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்.

•முட்டையிடும் காடைகளுக்கு 16 மணி நேரம் வெளிச்சம் அவசியம் இருக்க வேண்டும்.

#காடைக்குஞ்சு_பராமரிப்பு_முறைகள்

•காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச்சிறியவையாக 8-10 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இதனால் கோழிக்குஞ்சுகளை விடக் காடைக்குஞ்சுகளுக்கு அதிகம் வெப்பம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றின் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத்திணறி குஞ்சுகளில் இறப்பு அதிகம் காணப்படும்.

•வேகமான குளிர் காற்று வீசும் போதும் ஜன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், கொட்டகையில் பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத்தடை ஏற்படும் போதும் காடைக்குஞ்சுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கி இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

#இனப்பெருக்கம்

•காடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8 வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும்.

•கருவுட்ட முட்டை பெற வேண்டுமெனில் பெட்டை காடைகளே ஆண் காடைகளுடன் 8 – 10 வார வயதில் சேர்க்க வேண்டும். 5 பெண் காடைகளுக்கு ஒரு ஆண்காடை என்ற விகித்த்தில் வளர்க்கலாம்.

•அடைவைத்த 18 வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும்.

•500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடை குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

#காடைகளில்_ஏற்படும்_நோய்கள்

•முட்டையிடும் காடைகளுக்கு போதுமான தாது உப்புகளும், வைட்டமின்களும் போதுமான அளவில் அளிக்கப்படாததால் குஞ்சுகள் பொரிக்கும் போது அவற்றின் கால் வலுவிலந்தும், நோஞ்சானாகவும் இருக்கும். இதனை தவிர்க்க இனப்பெருக்கம் செய்யும் காடைகளுக்கு போதுமான அளவு தாதுஉப்புகளும், வைட்டமின்களும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்

•கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பதால் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

•முறையான காடைக்குஞ்சு பராமரிப்பு, பண்ணைகளில் முறையான கிருமி நீக்கம், எப்பொழுதும் காடைகளுக்கு தூய்மையான குடிநீர், தரமான கலப்புத்தீவனம் போன்றவற்றை கையாண்டால் காடைகளில் இறப்பினை தடுக்கலாம்.

#காடை_இறைச்சி

•சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 70 முதல் 73% வரை இருக்கும். 140 கிராம் எடையுள்ள காடையிலிருந்து 100 கிராம் எடை இறைச்சி கிடைக்கிறது.

•காடை வளர்ப்பில் உள்ள சிரமங்கள்
ஆண் காடைகளின் கூவும் சத்தம் ரொம்ப இடையுறாக இருக்கும்.

•ஆண் பெண் காடைகளை சேர்த்து வளர்க்கும் போது ஆண் காடைகள் மற்ற காடைகளை கொத்தி குருடாகவும் சில சமயம் இறக்கவும் செய்கின்றன.

•கூண்டுகளை தினமும் சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீசும்.

#குறிப்பு
சந்தைப்படுத்தல் வசதி இருந்தால் மட்டும் முயற்சிக்கவும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!