Thursday , October 14 2021

கினிக்கோழி பற்றிய தகவலும் அதன்பயன்பாடும்

Share This

#கினிக்கோழி_பற்றிய_தகவலும்_அதன்_பயன்பாடும்
☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿

கினி கோழிகளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதிக விடையம் உள்ளது
இது ஒரு சிறந்த செல்லப்பிராணி ஒன்றோடு ஒன்று எப்போதும் சண்டை பிடிக்காது.

இவற்றை வளர்ப்பதால் எந்த ஒரு செலவும் இல்லை
காரணம் மற்றைய பிராணிகளை விட இவைகள் எந்த நேரமும் சுற்றி திரிந்துக் கொண்டே இருக்கும் அதனால் தங்களுக்கு தேவையான உணவுகளை தாமே தேடிக் கொள்ளும்.
அதோடு அவற்றின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இரவு நேரங்களில் மரங்களில் தங்குவதற்கும் பழகிக் கொள்ளும்.

நாட்டுக் கோழிகளை வளர்ப்பது போன்று பணம் செலவு பண்ணி தீவனங்கள் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
அதோடு நாட்டுக்கோழிகளுக்கு மருத்துவ செலவு செய்வது போன்று இதற்கு செய்யத் தேவையில்லை காரணம் நாட்டுக் கோழிகளை விட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கினி கோழிகளுக்கு அதிகம் உள்ளது.

அதோடு இதன் இறைச்சியாக இருக்கட்டும் இதன் முட்டையாக இருக்கட்டும் நாட்டுக் கோழிகளின் இறைச்சி முட்டையை விட பல மடங்கு புரதச்சத்து அதிகம்.

அதோடு கினி கோழிகள் வீட்டிற்கு சிறந்த காவலன் என்று சொன்னால் மிகையாகாது
ஆம் எமது வளவிற்குள் பாம்புகள் அல்லது வேறு ஏதும் விஷப்பூச்சிகள் வந்தால் உடனே அவற்றை கொத்தி சாப்பிட்டு விடும் அல்லது ஒன்றாகக்கூடி மிகப்பெரும் ஒலியை எழுப்பி சத்தம்போட்டு பாம்புகளை துரத்தி விடும்.

அதுமட்டுமல்ல எமது வீட்டிற்கு குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் புது நபர்கள் வருகை தந்தாலும் இவை அனைத்தும் ஒன்றாக கூடி மிகப்பெரும் பிரம்மாண்ட ஒலியை எழுப்பி கத்தி சத்தம்போடும்.

அதோடு எமது தோட்டத்திற்குள் வேறு ஏதும் விலங்குகள் வந்தால்கூட இவை அனைத்தும் மிகப்பெரும் ஒலி எழுப்பி சத்தம்போட்டு அவற்றை துரத்த முயற்சி செய்யும்.
சில நேரங்களில் இந்த முயற்சி இவைகளுக்கு ஆபத்தாகக்கூட முடியும்.

கினி கோழிகளின் கூட்டத்தில் இருந்து ஒன்று பிரிந்து சென்று விட்டாள் அது மீண்டும் கூட்டத்தோடு வந்து சேரும்வரை ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும்.
இவைகள் ஒலி எழுப்ப துவங்கினால் குறைந்தது அரைமணி நேரம் வரையாவது ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும்.

இவற்றின் சத்தம் ஒரு சிலருக்கு பிடித்திருக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது இவை அவற்றின் குணாதிசயம் ஆகும்.

இவைகள் நாட்டுக்கோழிகளை போன்று எமது தோட்டத்தில் உள்ள செடிகளையோ அல்லது விதைகளையோ கால்களால் கிளறி உண்ணும் பழக்கம் இவைகளுக்கு இல்லை
இவைகளால் எமது பயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.
கினி கோழிகளின் எச்சம் நமது தோட்டத்திற்கு சிறந்த உரமாகவும் அமைகின்றது.

இவைகள் நாட்டுக்கோழிகள் போன்று இல்லாமல் மிக உயரத்திற்கு பறக்கும் தன்மை கொண்டவை.
இவற்றின் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டை போன்று இல்லாமல் உறுதியான ஓடு கொண்ட முட்டையாக இருக்கும்.
இம் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் காலம் 28 நாள் ஆகும்.

அதோடு இவைகள் யாருக்கும் தெரியாத இடத்தில் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து. குஞ்சுகளை கூட்டி வரும் பழக்கம் உடையது.
குஞ்சுகளை பாதுகாப்பதிலும் மிக கவனமாக இருக்கவும்.

கிளி கோழிகளை புதிதாக வாங்கி வளர்க்கும் நண்பர்கள் ஒரு தடவை வளர்த்து பாருங்கள் நாங்கள் கூறியதிலிருந்து எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் அப்படியே நடக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!