Thursday , October 14 2021

கிர் பசுக்கள் பற்றிய தகவல்

Share This

#கிர்_பசுக்கள்_பற்றிய_தகவல்LF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

கிர் மாடு (Gir cow) என்பது இந்தியாவின், நாட்டு மாட்டுவகைகளுள் ஒன்று.
இவை உருவில் பெரியவையாகவும், பார்ப்பதற்கும் எழிலார்ந்தவையாகவும் உள்ளது.

இந்த இனம் குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது.
இவ்வகை மாடுகள் பெருமளவில் அழிந்துவிட்டதால் குஜராத் மாநில அரசு பிரேசில் நாட்டிடமிருந்து இந்த மாடுகளின் 10,000 உயிரணு குப்பிகளை வாங்கி இனப்பருக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மாடுகளை இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் பாவ்நகர் மகாராஜா பிரேசில் நாட்டிற்கு நல்லெண்ண அடிப்படையில் பரிசாக வழங்கிய கிர் மாடுகளின் வாரிசுகள் அங்கே அதிகமாக வளர்க்கப்படுகின்றது.

இதன்தோல் செவ்வலை நிறத்தில் மிருதுவாக இருக்கும். சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும்.

இது பார்ப்பதற்கு உருவத்தில் பெரிதாக இருக்கும். இதன் தலை பெரியதாகவும், நெற்றி விரிவடைந்ததாகவும், கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம் அளிக்கும்.
காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.

இதன் எடை 350 தொடக்கம் 400 கிலோ வரை வளரும்.
பார்ப்பதற்கு உருவத்தில் பெரிதாக இருந்தாலும் பாசமாக மனிதர்களோடு பழகும் குணம் கொண்டவை.
இந்த மாடுகளில் அதிகமானவற்றின் கால்கள் கட்டி பால் கரப்பது இல்லை.

இந்த மாடுகள் சிந்தி மற்றும் சஹிவால் போன்று வெப்பமான சூழலிலும் வாழ பழகிக் கொண்டவையாகும்.

பிறந்த கன்றுகள் சுமார் 48 மாதங்களில் பருவ வயதை அடைகின்றன.
இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள்.
சுமார் 7 கன்றுகள் வரை ஈனும்.
ஒவ்வொரு கன்றுக்கும் இடையிலுள்ள தூரம் 18 மாதங்கள் வரை ஆகும்.

மனிதர்களுடன் நன்கு பழகும் தன்மை கொண்டவை . நம் அசைவுகளை நன்கு புரிந்து கொள்ளும். பால் கறப்பது எளிது . அதாவது முரண்டு பிடிப்பது இல்லை .

நாம் அளிக்கும் தீவனத்தை பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் 14 முதல் 20 லிட்டர் பால் சாதாரணமாக கறக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
இதன் பாலில் நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து-4.0%

பால் உற்பத்தியில் இந்த வகை பசுக்களைப் பின்தள்ளுவதற்கு வேற எந்த பசுக்களாளும் இயலாது என்றால் அது மிகையாகாது.

இலங்கையில் ஊசி மூலம் இனவிருத்தி செய்யக்கூடிய வகையில் விந்தனுக்கள்
கால்நடை இனவிருத்தி திணைக்களத்தில் உள்ளது.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!