Friday , October 22 2021

கொடித்தோடை பயிரிடும் முறை

Share This

கொடித்தோடை பயிரிடும் முறை
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

பேசன் பழம் என்று சொல்லப்படும் கொடித்தோடை ஆனது இந்தியா, இலங்கை, பிரேசில் போன்று மட்டும் அல்லாமல் பல நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது.

இப்பழமானது பழச்சாறு உற்பத்திக்காக அதிக அளவில் பயிரிடப்படுகின்றது.
எல்லோராலும் அதிக அளவில் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் கொடித்தோடை யும் ஒன்று.

பல பழங்களின் மத்தியில் சிறந்த வாசனையுடனும். சிறந்த சுவையுடனும். உள்ள பழங்களில் இதுவும் ஒன்று.
நீர் நன்கு கிடைக்கக்கூடிய இடங்களில் நன்றாக வளரும்.
நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இப்பழங்கள் பல வண்ணங்களில் இருக்கும்.

கொடித்தோடை யானது பொதுவாக புரட்டாதி முதல் கார்த்திகை மாதங்களில்
அதிகளவில் பயிரிடப்படுகின்றது.
பந்தல் முறை மூலமே இப்பயிரானது வளர்க்கப்படுகின்றது.

பயிரிடும் போது 10 × 10 அடி இடைவெளியில்
1×1×1 என்ற அளவில் குழி தோண்டி. மாட்டெரு அல்லது மக்கிய உரத்தோடு கலந்து நடுகை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு செடிகளுக்கும் நீண்ட கம்புகள் ஊன்றி ஆறு அடி உயரத்தில் பந்தல் அமைக்க வேண்டும்.

கொடித்தோடை பொருத்தவரை மூன்றுக்கு மேற்பட்ட கன்றுகள் நட வேண்டும் என்று பரவலாக ஒரு கருத்தும் உள்ளது.
காரணம் கொடித்தோடையில் ஆண் மரம், பெண் மரம் என்று உள்ளதாகவும்
இரு மரங்களும். இருந்தால் மட்டுமே காய்க்கும் என்று அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது.

வீடுகளில் வளர்க்க விரும்பும் நண்பர்கள் கொடித்தோடைக்கு அருகில் வேறு ஒரு நீண்ட கால பயிர்கள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம் வேறு நீண்டகால பயிர்களுக்கு அருகில் கொடித்தோடை நட்டால் எதிர்காலத்தில் காய்க்கும் திறன் மிகக் குறைவாக இருக்கும். சில நேரங்களில் பூக்கும் ஆனால் காய்க்காது.

கொடித்தோடை ஆனது ஏக்கருக்கு 400 கன்றுகள் வீதம் நடவு செய்யலாம்.
நட்டு ஆறாவது மாதத்தில் இருந்து ஐந்து வருடங்களுக்கு தொடர்ச்சியாக பலன் தரும்.
அதோடு நட்ட நாட்களில் இருந்து தொடர்ச்சியாக ஈரப்பதன் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப் பயிரானது மற்ற பயிர்களோடு ஒப்பிடுகையில் நோய் தாக்கம் குறைவாக இருக்கும்.
ஆகையால் ரசாயனம் இல்லாமல் முற்றுமுழுதாக இயற்கையாகவே பயிரிடலாம்.

கொடித்தோடையை பொறுத்தவரை காலை வேளையில் கிருமி நாசினிகளை பயன்படுத்த கூடாது.
அது இயற்கையான கிருமிநாசினியாக இருந்தாலும் சரி ரசாயனம் ஆக இருந்தாலும் சரி.

காலை வேளையில் கிருமி நாசினிகளை பயன்படுத்தினால் மகரந்த சேர்க்கைக்கு உதவக்கூடிய தேனீக்கள் மற்றும் ஏனைய பூச்சிகளின் வருகை தடைப்பட்டு காய் பிடிக்கும் வீதம் குறைந்து விடும்.

கொடித்தோடையானது ஒரு ஏக்கரில் பயிரிட்டால் அறுவடை செய்த நாளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 10 டன் பழங்கள் வரை அறுவடை செய்யலாம்
இப்பழங்களை பொருத்தவரை சந்தை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

அதோடு இப்பழங்களானது மற்றய பழங்கள் போன்று இல்லாமல்.
அறுவடை செய்த நாளிலிருந்து 100 நாட்கள் வரை எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல். பழுதாகாமல் இருக்கும்.
இப்பழத்தின் வெளிப்புறத்தில் காய்ந்து சுருக்கம் விழுந்தாலும் பலத்தின் உட்பகுதி 100 % தரமானதாக இருக்கும்.

கொடித்தோடையை பயிரிட்ட விவசாயிகள் அதிக அளவில் லாபம் ஈட்டுவதற்கு இப்பழத்தின் பளுதாகாத தன்மையும்.
இதன் சுவையும் மே காரணமாக இருக்கின்றது.

அதோடு இவற்றின் இலைகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாகும்.
இதன் குருத்து இலைகளை சுண்டி சாப்பிடுவதன் மூலம் இந்நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!