Friday , October 22 2021

சஹிவால் பசு பற்றிய தகவல்

Share This

#சஹிவால்_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐂🐃🐄🐂🐃🐄
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

சாஹிவால் இந்தியாவின் சிறந்த பால் உற்பத்தி கால்நடை இனமாக கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாபின் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் உள்ள சாஹிவால் பகுதியில் இருந்து இந்த இனம் அதன் பெயரைப் பெற்றது.

இவ்வகையான பசுக்கள் வெப்ப பிரதேசத்திலும் வாழக்கூடியது.
அதிகமான பண்ணையாளர்கள். இந்த மாடுகளை சிறப்பு பால் நோக்கத்திற்காகவும். நாட்டு கறவை பசுக்களில் முதன்மையாகவும் கருதுகின்றார்கள்.

இந்தப் பசுக்களை பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றார்கள்.
சாஹிவால் மாடுகள் பழுப்பு. சிவப்பு நிறத்தில் உள்ளன.
இதிலும் கலப்பினங்கள் பல நிறங்களில் உள்ளது.

இந்தப் பசுக்கள் முரண்டு பிடிக்கும் தன்மை இல்லாமல்.
வளர்க்கும் பண்ணையாளர்களுடன் பாசமாக பழகிக் கொள்ளும்.

சாஹிவால் மாடுகளின் சராசரி நாள் ஒன்றுக்கு 14 – 20 லீடர் பால் தரக்கூடியது.
இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பசுக்கள் இதைவிட அதிகமாகவும் பால் தரக்கூடியது.
ஹரியானாவில் உள்ள கர்னாலின் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில்
சஹிவால் பசுக்கள் ஒரு ஈத்தில் 6,000 லிட்டர் பால் கறந்ததாக குறிப்புக்கள் உள்ளது.

இதன் எடை 350 தொடக்கம் 400 கிலோ வரை வளரும்.
பாசமாக மனிதர்களோடு பழகும் குணம் கொண்டவை.
பால் கறப்பது எளிது. அதாவது முரண்டு பிடிப்பது இல்லை.

இந்த மாடுகள் சிந்திப் பசுக்கள் போன்றும். சற்று பெரிதாகவும் இருக்கும்.
வெப்பமான சூழலிலும் வாழ பழகிக் கொண்டதால் அதிகமான பண்ணையாளர்கள் சஹிவால் மாடுகளை பால் உற்பத்திக்காக தேர்ந்தெடுக்கிறார்கள்.

பிறந்த கன்றுகள் சுமார் 28 மாதங்களில் பருவ வயதை அடைகின்றன.
இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 16 ஆண்டுகள்.
சுமார் 12 கன்றுகள் வரை ஈனும்.
ஒவ்வொரு கன்றுக்கும் இடையிலுள்ள தூரம் 14 மாதங்கள் வரை ஆகும்.

பல இடங்களில் பெரிய அளவிலான பண்ணைகளில் இந்தவகை பசுக்களை முதன்மை பால் உற்பத்திக்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!