Thursday , October 14 2021

சூப்பர் நேப்பியர் புல்லின் சிறப்பு

Share This

#சூப்பர்_நேப்பியர்_புல்லின்_சிறப்பு
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

கால்நடைகளுக்கான தீவன பயிர் வகைகளில் அதிகபடியான உற்பத்தி திறன் கொண்ட ரகம்.ஏக்கருக்கு 200 டன் தீவனங்களை அறுவடை செய்யலாம்.

தண்டுபகுதிகளில் சுனை குறைவு, ஆகையால் பணியாளர்கள் சிரமம் இல்லாமல் வெட்டி, தூக்கி செல்லலாம்.
மிருதுவான, இனிப்பு சுவையை உடைய தண்டு பகுதிகளை, கால்நடைகள் மிகவும் விரும்பி உண்பதால், தீவனம் வீணாகுதல் இல்லை.

மற்ற புல் வகை தீவனங்கள் மாவுசத்தை மட்டுமே பிரதான சத்தாக கொண்டிருக்கின்றன.
சூப்பர் நேப்பியர், தானிய வகை கம்பு பயிருடன் புல் வகையான யானை புல்லை ( நேப்பியர்) ஒட்டுகட்டி உருவாக்கியதன் விளைவாக தானியத்தின் புரதத்தையும், புல்லின் கார்போஹைட்ரேட்டையும் ஒருங்கிணைத்து சூப்பர் நேப்பியர் புல்லாக உருவாக்கம் பெற்றுள்ளது.

சூப்பர் நேப்பியரிலுள்ள புரதத்தின் அளவு 14 லிருந்து 18 சதவிகிதம்.
இந்த அளவு புரதம் புல் வகை தீவனகங்ளில் சூப்பர் நேப்பியரில் மட்டுமே உள்ளது.

வழக்கமாக கால்நடை வளர்ப்பவர்கள் பண்ணையில் வைக்கோல் மற்றும் சிறியரக புல் வகைகளை மட்டுமே பயிரிட்டு கால்நடைகளுக்கு அளிப்பர்.
இதனால் உடல் வளர்ச்சிக்கும், பாலின் தரத்திற்கு அடிப்படையான புரத குறைபாட்டால் கன்றுகளிடேயே சரியான உடல் வளர்ச்சி இல்லாமை, சரியான காலத்தில் சினை பருவங்கள் தாமதமாகுதல், பாலின் அடர்த்தி மற்றும் அளவு குறைதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

புரத தேவையை பூர்த்தி செய்ய அடர்தீவனங்களை அதிகபடியாக கொடுக்கும் சூழ்நிலை ஏற்படும். இவற்றால் பண்ணையின் செலவுகள் அதிகரிக்கும்.

இது போன்ற நடைமுறை சிக்கல்களை சூப்பர் நேப்பியர். களைகின்றது.
தட்டுபாடில்லா, புரதம் நிறைந்த தீவனங்களை உற்பத்தி செய்வதால், சிறு அளவில் கால்நடை வளர்ப்பவர்களின் தீவன செலவை பெருவாரியாக குறைக்கிறது.

சூப்பர் நேப்பியர் தொழில்முறை கால்நடை வளர்ப்பவர்களுக்கும், ஒன்று அல்லது இரண்டு என வீட்டில் வளர்ப்பவர்களுக்கும் மிகவும் இலாபகரமானதாக உள்ளது.

கோ4, கோ5 ஒரு ஏக்கரில் பயிரிட்டால் அதிகபட்சமாக 6 மாடுகளும் 20 ஆடுகளும் வளர்க்க முடியும்.
சூப்பர் நேப்பியர் நாட்டினால் 15 மாடுகளும் 40 ஆடுகளும் வளர்க்க முடியும்.

#நடவுமுறை
▪சூப்பர் நேப்பியர் தண்டுகளை வரிசை முறையில் நடவு செய்யும் போது விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

▪நிலத்தை கட்டிகள் இல்லாமல், புழுதி ஓட்டி, அடியுரமாக ஊட்டமேற்றிய தொழுஉரம் அல்லது ஆட்டு உரம் ஏக்கருக்கு 100 கிலோ அளவில் போட்டு, கடைசி உழவு செய்து கொள்ளலாம்.

▪வரிசை நடவின்போது, நிலத்தின், இரு புறமும், நேராக கயிறு பிடித்து, கயிற்றை ஒட்டி அரை அடிஇடைவெளியில் கம்புகளை மண்ணில் ஊன்றி நடவும்.

▪கம்புகளில் ஒரு கணு முழுவதுமாக மண்ணுக்குள்ளேயும், மறுகணு மண்ணுக்கு வெளியே 45 டிகிரி சாய்ந்து மண்ணை தொட்டும் இருக்குமாறு நடவு செய்தல் வேண்டும்.

*வரிசை நடவில் இரட்டை வரிசை நடவு முறை சிறப்பாக பயனளிக்கிறது* .
இரட்டைவரிசையிலுள்ள, வரிசையின் இடைவெளி — 1 அடி.
கரணைகளின் இடைவெளி — அரை அடி.
ஒவ்வோர் இரட்டை வரிசைகளுக்கு இடையேயான இடைவெளி — 2 அடி வைக்கலாம்.

கம்புகளின் இடைவெளியை குறைத்து, வரிசைகளை, இரட்டை வரிசை மூலம் அதிகப்படுத்தி, இரட்டை வரிசைகளுக்கு இடையே, இடைவெளியை அதிகப்படுத்துவதன் மூலம், நல்ல காற்றோட்டம், பராமரிக்க எளிதான வடிவமைப்பு போன்ற சிறப்பம்சங்களால், குறைந்த இடத்தில் அதிக விளைச்சலை இவ்விரட்டை வரிசை நடவு முறை தருகின்றது.

#பாராமரிப்பு
▪நடவு செய்த உடன் ஜீவாமிர்தம் கலந்து பாசனம் செய்வதின் மூலம் கம்புகளில் நூறு சதவிகித முளைப்பு திறன் சாத்தியமாகிறது.

▪முளைப்புகள் வரும் வரை நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்யலாம்.
பயிர் நன்கு கிளைத்த பின், பத்து நாட்களுக்கு ஒரு
முறை ஜீவாமிர்தம்,மீன்அமிலம் கலந்த பாசனம் செய்யலாம்.

▪நட்டு 15 நாள் கழித்து, களைகளை எடுப்பது அத்தியாவசியம்.

▪பயிரின் 90வது நாளில் முதல் அறுவடையை மேற்கொள்ளலாம்.
அதற்கு அடுத்த ஒவ்வோர் 45 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம்.

அறுவடைக்கு பின்னர், மீண்டும் துளிர்த்து வந்தவுடன், மீன்அமிலம் 10 லிட்டருக்கு 150 மில்லி என இலைவழி தெளிப்பு செய்வதின் மூலம் சிறப்பான பச்சையத்தையும், துரித வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தலாம்.

இது போன்ற சிறப்பான, தொடர் பராமரிப்பில் ஐந்து வருடங்கள் வரை சூப்பர் நேப்பியர் நிலைத்து, நம் கால்நடை செல்வங்களுக்கு தடையில்லாமல் தீவனங்களை அள்ளி தந்து கொண்டிருக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!