Friday , October 22 2021

செடி அவரை பயிற்செய்கை

Share This

#செடி_அவரை_பயிற்செய்கை
🌿🍂☘️🍁🌳🌿🍂☘️🍁🌳🌿🍂☘️🍁🌳

🍁பட்டங்கள் இல்லாத காய்கறிகளில் இதுவும் ஒன்று. அதனால் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. நிலையான சந்தை வருமானம் உள்ள காய்களில் இதுவும் ஒன்று .

🍁செடி அவரையில் பல தனியார் மற்றும் வேளாண் பல்கலைக்கழக ரகங்கள் உள்ளன. அணைத்து ரகங்களும் பயிர் செய்ய ஏற்றது.
சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் உள்ள பூக்கள் கொண்டவை.

🍁மார்கழி மற்றும் சித்திரை மாதங்களில் செடி அவரை அதிகம் பயிரிடப்படுகின்றது. தண்ணீர் தேங்காத இடங்களில் புரட்டாசி மாதத்தில் பயிரிடுவது சிறந்தது.

🍁ஏக்கருக்கு மூன்று கிலோ விதை போதுமானது 2×2 அடி இடைவெளியில் பாத்தி பிடித்து நடவு செய்ய வேண்டும்.
இரண்டு தடவை களை எடுத்தல் வேண்டும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
எந்த காரணம் கொண்டும் தண்ணீர் தேங்க கூடாது.
செடி சாயாமல் மண் அனைத்து விடுவது அவசியம்.

🍁செடி அவரைக்கு அடி உரமாக ஏக்கருக்கு பத்து டன் தொழு உரம் இட வேண்டும். கோழி உரம் இடுவது சிறப்பு. மண் புழு உரம் இடுவதால் செடிகளின் வாழ்நாள் நீடிக்கும். இதனால் விளைச்சல் அதிகமாகும்.

🍁பூச்சி தாக்குதலை தடுக்க கண்டிப்பாக வாரம் ஒரு முறை கற்பூரகரைசல் தெளிக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் தண்ணீர் பாய்ச்சும் போது பாசன நீரில் கலந்து பயிரின் அடிப்பகுதியில் ஊற்றி விட வேண்டும்.

🍁செடி நட்ட 65வது நாள் முதல் மொட்டுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
75 வது நாள் முதல் காய் பறிக்கலாம்.
செடி அவரையில் பூ உதிர்தல் அதிகமாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. தேங்காய் பால் தயிர் கரைசல், மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் தெளிப்பதன் மூலம் பூ உதிர்தலை முற்றிலும் தடுக்கலாம்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!