Saturday , October 23 2021

செயற்கை உரத்தை விட அதிக_நன்மை தரும் ஆட்டெரு

Share This

#செயற்கை_உரத்தை_விட_அதிக_நன்மை_தரும்_ஆட்டெருLF
🐐🐏🐑🐐🐏🐑🐐🐏🐑🐐🐏🐑🐐🐏🐑
🌳☘️🍂🍃🍁🌳☘️🍂🌿🍁🌳🍂☘️🌿🍁

🍂 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு இரசாயன உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. அத்தகைய இரசாயன உரங்களை தவிர்க்க நமக்கு உதவிபுரியும் ஒன்றுதான் ஆட்டு எரு.

🍂 மாட்டு எருவில் உள்ளதை போலவே ஆட்டு எருவிலும் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து உள்ளன. மேலும் ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, அவற்றிற்கு அளிக்கப்படும் தீவனத்தை பொறுத்தே அமைகிறது.
மற்றைய எருவை விட ஆட்டு எருவில் பயிருக்குத் தேவையான அதிக சத்துக்கள் உள்ளது.

🍂 அடைப்பு முறையில் வளர்க்கும் ஆடுகளின் கழிவுகளை விட.
திறந்த முறையில் வளர்க்கும் ஆடுகளின் கழிவுகள் சிறந்த உரமாக கருதப்படுகின்றது.

அல்லது அடைப்பு முறையில் வளர்க்கும் ஆடுகளுக்கு பலவகையான இலைகளை உணவாக கொடுக்க வேண்டும்.

#ஆழ்கூளம்_அமைப்பு
🐐 முதலில் ஆட்டுக்கொட்டகையின் தரையில் கிளிசர்யா இலைகள் அல்லது வைக்கோல், அல்லது வாழை இலைச் சருகுகள், மரத்தூள், தென்னை நார்க்கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டுக்கு 7 கிலோ வீதம் நிரப்ப வேண்டும்

🐐 இதனால் ஆட்டுப் புழுக்கை ஆழ்கூளத்தில் படிந்துவிடும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து, 4 மாதங்களுக்கு ஒருமுறை ஆழ்கூளத்தை அகற்றி நன்கு கலந்து பயிர் நிலத்தில் உரமாக இடலாம்.

#ஆட்டெருவின்_நன்மை
🐐 ஒரு வருடத்திற்கு 10 நாட்டு ஆடுகள் மூலமாக 1.5 டன் ஆட்டு எரு கிடைக்க வாய்ப்புள்ளது.

🐐 இதுவே செம்மறி ஆடாக இருந்தால் ஒரு வருடத்திற்கு 10 ஆடுகள் மூலம் 2.5 டன் ஆட்டு எரு கிடைக்கும்.

🐐 40 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்தும், 50 கிலோ யூரியாவிலுள்ள தழைச்சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டிலுள்ள மணிச்சத்து போன்ற அனைத்தும்.
100 kg ஆட்டு எருவில் உள்ளது.

🐐 ஆட்டு எருவில் தழைச்சத்து மெதுவாக வெளியாவதால், அது பயிரின் தேவைக்கேற்ப சீராக கிடைக்கும்.

🐐 ஆழ்கூள ஆட்டு எருவை நிலத்தில் இட்டால் களைகள் குறையும்.

🐐 மண் தொட்டி, பாலித்தீன் பைகளில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்பவர்கள் இந்த ஆழ்கூள ஆட்டு எருவை பயன்படுத்தினால், களைகளற்ற நாற்றங்காலை அமைத்து, தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.

🐐 ஆழ்கூள உரத்தை நெல், தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற அனைத்து வகையான பயிர்களுக்கும் இடுவதால் அதிக லாபம் பெற முடியும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!