Friday , October 22 2021

செவ்வாழை பயிர்ச்செய்கை முறை

Share This

#அதிக_லாபம்_தரும்_செவ்வாழை_பயிர்ச்செய்கை_முறை
🍌🥝🍐🍑🍏🍇🍈🍎🍒🍌🥝🍑🍏🍇
🍃🌿☘️🌳🌾🍃🌿☘️🌳🌾🍃🌿☘️🌳

வாழை ரகங்களில் பிரசித்தி பெற்றது இந்த செவ்வாழை. மற்ற வாழை ரகங்களில் இருந்து சற்று வேறுபட்டது. அனைத்து தட்ப வெப்ப நிலைகளையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. நம் பாரம்பரிய ரகமாகவும் கருதப்படுகிறது. அதிக சத்துக்கள் தேவைப்படும் பயிர்களில் முதன்மையானது வாழை.

ஆடி, மார்கழி மற்றும் சில சமயங்களில் சித்திரையில் நடுகை செய்யலாம்.

நடவு முதல் அறுவடை வரை சுமார் 12 மாதங்கள் ஆகும். சில சமயங்களில் சற்று மாறுபடும்.

பசுந்தாள் உரங்களை மண்ணில் விதைத்து அவை வளர்ந்த பின் மடக்கி உழுது,
பின் வாழை நடவு செய்வது சிறப்பு.
அல்லது ஆட்டெரு. மாட்டு எரு. மக்கிய உரம் ஏதாவது ஒன்றை மண்ணில் பரப்பி உழுது நட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

தண்ணீர் தேங்காத அனைத்து மண்ணிலும் நன்கு வளரும். சொட்டு நீர் பாசனம் சிக்கனமானது.
இருப்பினும் யாழ் மாவட்டத்தில் உள்ளதைப் போன்று செம்மண்ணாக இருந்தால் இதன் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும்.

நடவு இடைவெளி 8 × 8 அடி க்கு குறையாமல் இருக்க வேண்டும். சுமார் 1 அடி ஆழ, அகலமுள்ள குழிகள் போதுமானவை. இதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 675 கன்றுகள் நடவு செய்யலாம்.

நடவு குழிகளில் முதலில் அவற்றின் உட்புறம் கிளிஞ்சல் சுண்ணாம்புத்தூள் சிறிதளவு தூவி விட்டு, பின்னர் போதுமான அளவு செறிவூட்டிய மண்புழு உரம் மற்றும் சிறிதளவு நுண்ணுட்டங்கள் கலந்து நடவு செய்வதன் மூலம் விரைவில் கன்று துளிர்க்கும்.

செவ்வாழை கன்றுகள் இரண்டு வகையில் நடவு செய்யப்படுகின்றன. ஒன்று திசுவளர்ப்பு. மற்றொன்று சாதாரண கன்றுகள் நடவு.
இதில் குழி நடவு முறை பாதுகாப்பானது. இதனால் சாயும் தன்மையற்ற திடமான மரம் மற்றும் தரமான தார்கள் கிடைக்கும்.

சுமார் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செறிவூட்டிய தொழு உரத்துடன் சர்க்கரை, தயிர் மற்றும் மீன் அமிலம் கலந்து, பின் ஐந்து நாட்கள் குவியலாக வைத்து வேரில் இடும்போது நீளமான மற்றும் திரட்சியான தார்கள் கிடைக்கும்.

மற்ற வாழை ரகங்களை தாக்கும் அனைத்து நோய்களையும் அதாவது இலைப்புள்ளி, தண்டுத்துளைப்பான், முடிக்கொத்து நோய் மற்றும் கிழங்கு அழுகல் ஆகிய அனைத்தைம் கற்பூர கரைசல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கன்று நட்ட மூன்றாவது மாதம் முடிவில் ஒரு பக்க கன்றையும், அதன்பின் அடுத்து இரண்டாவது மாதம் முடிவில் மற்றொரு கன்றையும் அப்படியே விடுவதன் மூலம் சுமார் 18 மாதங்களில் மூன்று தார்களை அறுவடை செய்யலாம். ஒன்பதாம் மாதம் பூ தோன்ற ஆரம்பிக்கும்.

மண்ணில் வாழைக்கு நல்ல சத்துக்களை இடுவதன் மூலம் மூன்று தார்களிலும் நன்கு திரட்சியான காய்கள் மற்றும் சமமான சீப்புகள் கிடைக்கும்.
மேலும் கட்டாயம் வலைப்பூவில் இருந்து காய்கள் வந்து முடிந்தபின் 3 நாள் கழித்து பூவினை வெட்டி எடுத்து விடவேண்டும்.

மரங்கள் சற்று உயரம் அதிகமாகும் போது கழிவுகளை கொண்டு மண் அணைத்து முட்டு கொடுப்பது பாதுகாப்பானது. முடிந்தவரை தேவையற்ற தாவரக்கழிவுகள் தோட்டத்தில் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

மருத்துவ குணங்கள் என்று பார்த்தால் இவை கண்பார்வை குறைபாடு மற்றும் ஆண்மை குறைவிற்கு நல்ல தீர்வு.
ஆகையால் சந்தையில் செவ்வாழை பழத்திற்கு தனி மதிப்பு உள்ளது.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!