Thursday , October 14 2021

சோற்றுக் கற்றாழை பயிர்ச்செய்கை முறை

Share This

சோற்றுக்_கற்றாழை_பயிர்ச்செய்கை_முறைLF

☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿🍀🍂🍃🍁🌳

வறட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது.
இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் பெருநிலப்பரப்பில்
எவருடைய பராமரிப்பும் இன்றி தன்னிச்சையாக வளர்ந்து காடாகிக்கிடக்கின்றது.

தற்பொழுது பல நாடுகளில் பல்வேறு அழகுச் சாதனங்கள். மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

இது வெப்ப மண்டல பயிர் என்பதால்
கற்றாலையை பயிர் செய்ய விரும்பும் நண்பர்கள் நீர்த்தேவை பற்றி கவலைப்பட தேவை இல்லை.

கற்றாழையில் பல வகை இருந்தாலும்
பொதுவாக மூன்று வகையான கற்றாழை நடுகை செய்யப்பட்டு வருகின்றன.
1. குர்குவா கற்றாழை
2. கேப் கற்றாழை
3. சாகோட்ரின் கற்றாழை

தரிசு மண், மணற்பாங்கான நிலம், இருநிலை மண் போன்றவை ஏற்றது. எனினும் களிமண், கல்கிறவல் மண் தவிர்ந்த எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை நடுகை செய்யலாம்.
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.

கற்றாழையை வருடத்திற்கு இரண்டு பருவங்களில் அதாவது ஜுன் – ஜுலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடுகை செய்யலாம்.

25 முதல் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம்.
இரண்டு மாத வயதுடைய பக்க கன்றுகளை பிரித்து நடுகை செய்ய வேண்டும்.

நிலத்தை இரண்டு முறை உழுது ஏக்கருக்கு 3 டன் தொழு எரு இட்டு, உழுது. சமன் செய்து சிறிய பாத்திகளை அமைத்து 2 × 2 அடி இடைவெளியில் நடுகை செய்ய வேண்டும்.
கன்று நாட்டிய நாட்களிலிருந்து ஒரு வாரத்திற்கு உயிர்த் தண்ணீர் விட வேண்டும்.
அதன்பிறகு வாரத்தில் இரு தடவை நீர்ப் பாய்ச்சினால் போதும்.

ஒரு ஏக்கருக்கு 10000 கன்றுகள் வரை நடவு செய்யலாம்.
ஏக்கருக்கு 10 தொடக்கம் 20 டன் கற்றாழை விளைச்சலாகக் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பினை பற்றி ஐயம் கொள்ள தேவையில்லை அதிகமாகவே சந்தை வாய்ப்பு இருக்கு இருப்பினும் ஆரம்பகட்டத்தில் பெரிய அளவில் நடுகை செய்யாமல் சிறிய அளவில் இருந்து கொண்டு போகலாம்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm

 

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

2 comments

  1. Avatar
    ES Thangha paandiyan

    Nice informative

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!