Thursday , October 21 2021

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி

Share This

#ஜீவாமிர்தம்_என்றால்_என்ன?
#ஜீவாமிர்தம்_தயாரிப்பது_எப்படிLF
🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁☘️🌳🍂🌿🍁☘️

இது ஒருவகையான நில வள ஊக்கி மற்றும் பயிர் வளர்ப்பு ஊக்கி என்றும் கூறலாம்

#ஒரு_ஏக்கருக்கு_தேவையான_பொருட்கள்:

🌿நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ

🌿நாட்டு பசுங்கோமியம் 5 லிட்டர்

🌿சக்கரை 1 கிலோ

🌿இதோடு முடிந்தால் 1 கிலோ பழைய வாழைப்பழம்

🌿பயறு வகை மாவு – 1 கிலோ அல்லது உளுந்து மா

🌿பயன் படுத்தும் நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட 1 கிலோ மண்

🌿தண்ணீர் 20 லிட்டர் (குளோரின் கலக்காதது)

#தயாரிப்பு_முறை:

தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம் ,பயறு வகை மாவு,சக்கரை இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும் .இதனுடன் 20 லிட்டர் தண்ணிரை சேர்த்து நிழலான இடத்தில தொட்டியின் வாய் பகுதியை முடி வைக்க வேண்டும் . தினமும் 2 முறை.
7 நாட்களுக்கு தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும்.

7 நாள் கழிந்த பின் இறுதியில் இதனுழ் தெறி புழுக்கள் போன்ற சிறிய சிறிய புழுக்கள் உருவாவதற்கும் வாய்ப்புள்ளது.
இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை
இதனை நன்கு வடிகட்டி இதில் பெறப்படும் ஜீவாமிர்த நீர் மட்டுமே எமக்கு தேவை.

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

#பயன்படுத்தும்_முறை
ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம்.
எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.

நீரில் கலந்து விடுவதென்றால்,
9 லீற்றர் நீரில் 1 லீற்றர் ஜீவாமிர்தத்தை கலந்து பாவிக்கலாம்,

கிருமிநாசினி தெளிக்கப்படும் கொள்கலன்கள் மூலம் தெளிப்பதாக இருந்தால்
5 லீற்றர் நீரில் 1 லீற்றர் ஜீவாமிர்தத்தை கலந்து செடி நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும்.

பயிர்கள் நோய் இல்லாமல் வளர இது உதவும்.
தேவைப்பட்டால் 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

பூக்கள் பூத்திருக்கும் பயிராக இருந்தால் காலை நேரங்களில் இக்கரைசலை தெளிக்க கூடாது.
பூக்காத பயிராக இருந்தால் எந்த நேரத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!