Saturday , October 23 2021

ஜெர்சி பசுக்கள் பற்றிய தகவல்

Share This

#ஜெர்சி_பசுக்கள்_பற்றிய_தகவல்LF
🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃🐂
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

ஜெர்சி மாடு என்பது ஒரு கறவை மாடு ஆகும் இது மிகவும் பழமையான குட்டை மாட்டு இனம் ஆகும்.
இந்த மாடுகள் கால்வாய் தீவுகளின், ஜெர்சி தீவில் தோன்றியவை,

இவை ஆறு நூற்றாண்டுகளுக்குக் கலப்பு இல்லாமல் வளர்ந்துவந்தவை.
இந்த இன மாடுகளின் பால் அதிகக் கொழுப்புத் தன்மை உடையதாக இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களால் இப்பசுக்களை அதிக பால் உற்பத்திக்காக பன்றியின் உதவியோடு உருவாக்கினார்கள் என்றும்.
இப் பசுக்களில் பன்றியின் மரபணுவும் உள்ளதாக பலரால் சொல்லப்படுகின்றது.

மற்றைய நாட்டு பசுக்களை போன்று இல்லாமல் இதன் பராமரிப்புச் செலவு சற்று அதிகமாகவே இருக்கும்.
நாட்டு மாடுகளை போன்று இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும்.
இப் பசுக்களை வெப்ப பிரதேசங்களில் வளர்ப்பது மிகவும் கடினம்.

இருப்பினும் இவ் இன பசுக்கள் இல்லாத பண்ணை இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆம் பல பண்ணைகளில் இப் பசுக்களில் ஒன்றாவது கட்டாயம் இருக்கும்.

இந்தவகை பசுக்களை வெப்ப பிரதேசங்களில் வளர்ப்பதாக இருந்தால் அதிக செலவுடன் சிறந்த பாதுகாப்பு கட்டமைப்போடு மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.

இந்த வகை மாடுகள் வளர்பவரிடம் அன்பார்ந்த மனநிலை கொண்டிருபது ஆகியவற்றால் மிகவும் பிரபலமானதாகும்.

ஜெர்சி மாடுகள் அதிகபட்சம் 400-450 கிலோகிராம் வரையிலான எடை கொண்டவை.
இவற்றால் கிடைக்கும் பால் உற்பத்தி பொருளாதார நலன்கள் சார்ந்த புகழுக்கு முதன்மை காரணியாக உள்ளது.

வெப்பப் பிரதேசத்தில் இந்தப் பசுக்களை வளர்ப்பதற்கு ஏற்றதாக இல்லாததால்
இந்தியா. இலங்கை போன்ற பல நாடுகளில். நாட்டு மாடுகளுடன் பெருமளவில் இந்த ஜெர்சி மாடுகள் கலப்பினம் செய்யப்பட்டு, ஜெர்சி கலப்பின மாடுகளே தற்போது பரவலாக உள்ளன.

இந்த மாடுகள் மிகவும் லேசான சாம்பல் நிறம்-(எலி நிறம்) முதல் செம்பட்டை நிறம் அல்லது கறுப்பு நிறத்திலும்கூட இருக்கும். இதன் உடல் பகுதிகளைவிட இடுப்பு, தலை, தோள் பகுதிகள் மிகவும் அடர்த்தியான நிறத்தில் இருக்கும்.

பிறந்த 30 மாதங்களில் சினைப்படுத்தலுக்கு தயாராகும்.
18 மாத இடைவெளியில் கன்று ஈனும்.
கலப்பு இல்லாத ஜெர்சி பசுக்கள் ஒரு நாளைக்கு 18 – 22 லிட்டர்வரை பால் தரும்.

கலப்பின ஜெர்சிகள் ஒரு நாளைக்கு 8-12 லிட்டர்வரை பால் தரும். இது தரும் பாலில் 5.3 சதவீதக் கொழுப்பு 15% இதர திட சத்துக்களும் உடையது.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!