Sunday , October 24 2021

தக்காளி பயிற்செய்கை

Share This

#தக்காளி_பயிற்செய்கைLF
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

தக்காளியில் பல ரகங்கள் உள்ளது
நாட்டு ரகங்களை நாங்கள் தேர்ந்தெடுப்பது சிறப்பாக இருக்கும்.
காரணம் நோய் எதிர்ப்பு சக்தி உடையதாக இருக்கும்.
பராமரிப்புத் தேவை அதிகம் ஏற்படாது

தக்காளியானது ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி பயிரிடுவதற்கு ஏற்ற பருவங்கள் ஆகும்.

வண்டல் மண்ணில் நல்ல விளைச்சல் தரும். மண்ணின் கார அமில தன்மை 6 – 7 ஆக இருக்க வேண்டும்.

தக்காளியானது 15 டிகிரி செல்சியஸ் இற்கும் குறைவான வெப்பநிலை காணப்படுமாயின் விளைச்சல் பாதிக்கப்படும்.
35 டிகிரி செல்சியஸ் இற்கு அதிகமான வெப்பநிலை இருந்தாலும் இதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும்.

ஒரு ஏக்கரில் பயிரிட 175 கிராம் அளவுள்ள விதை போதுமானது.
தேவையான அளவு தொழுவுரம் இட்டு 1.5 × 3 மீட்டர் நீளமுடைய நாற்றங்காலை தயார் செய்து அதில் தக்காளி விதைகளை தூவி நீர் பாய்ச்ச வேண்டும்.
30 நாட்களில் நாற்றுகள் வளர்ந்துவிடும்.

நாற்றுக்களை நடுவதற்கு முன்பு நிலத்தில் 2 டன் மக்கிய உரம் அல்லது தொழு உரம் இட்டு நன்கு உழுது பாத்திகளை உருவாக்க வேண்டும்.
60 செ.மீ இடைவழியில் நீளமான பாத்திகள் அமைத்து 45 செ.மீ இடைவழியில்
செடிகளை நட வேண்டும்.
ஏக்கருக்கு 14,000 செடிகள் வரை நாட்ட முடியும்.

பயிரை நட்டு உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின்பு மண்ணின் ஈரத்தன்மையை பார்த்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நாற்று நட்ட ஒரு மாதத்திற்கு பின்பு அதில் வளர்ந்துள்ள தேவையற்ற களைகளை நீக்கி வேர்களுக்கு தொழு உரம் இடவேண்டும் இதனால் நல்ல வளர்ச்சியும் நல்ல விளைச்சலும் பெறலாம்.

பூ பிடிக்க ஆரம்பிக்கும் போதும் காய்கள் முற்ற ஆரம்பிக்கும் போதும்
செலவில்லாமல் இயற்கையாக உருவாக்கக்கூடிய கிருமிநாசினியான பஞ்சகாவியா.
மற்றும் கற்பூர கரைசலையும் பயன்படுத்தலாம்.
பச்சைக் காய் துளைப்பான் போன்ற புழுக்கள் இதற்கு நிச்சயம் கட்டுப்படும்

முற்றுமுழுதாக இயற்கையாக பயிரிடுவதநாள் அதிக லாபம் பெறலாம்.
அறுவடைக்கு தயாரான காய்களை மட்டும் பறிக்க வேண்டும், காய்கள் கரும்பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும்பொழுது அதனை அறுவடை செய்ய வேண்டும்.

நீர்ப் பற்றாக்குறை இல்லாமல்.
விவசாயின் உழைப்பு மட்டும் இருந்தால் போதும்.
ரசாயன உரத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யத் தேவையில்லை
135 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 15 டன் தக்காளி அறுவடை செய்யலாம்.

தக்காளி இல்லாத சமையல் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
சமையலை பொறுத்தவரை அத்தியாவசியப் பொருளாக தக்காளி உள்ளது.
ஆம் தக்காளியை பொறுத்தவரை சந்தை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!