Thursday , October 14 2021

தர்பூசணி பயிற்செய்கை

Share This

#அதிக_லாபம்_தரும்_தர்பூசணி_பயிற்செய்கை
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉
🌳🍁🍀🍂☘️🌳🍁🍀🍂☘️🌳🍁🍀🍂☘️

தர்பூசணி இப்பொழுது உலகின் பெரும்பாலான நாடுகளில் உற்பத்தியாகிறது.
தென்இந்தியா. இலங்கையில் தர்பூசணி உற்பத்தி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது.

ஆரம்ப காலத்தை விட இனி வரும் காலங்களில் கட்டாயம் பயிரிட வேண்டிய பயிராக உள்ளது

உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கி நீர்ச்சத்தை அதிகரிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. இப்பொழுதும் வெயிற் காலங்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

#பயிரிடும் முறை:
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தர்பூசணி உற்பத்திக்கு சிறந்த காலங்கள் ஆகும்.
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் தர்பூசணி பயிர்ச்செய்கைக்கு சிறந்த நிலமாகும்.

மண்ணின் கார அமில தன்மை 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அந்த மண்ணில் நல்ல உற்பத்தி கிடைக்கும்.

பயிரிடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்கு உழுது சமன்படுத்த வேண்டும். அதில் 5 அடி இடைவெளிகளில்
1 × 1 × 1 என்ற குழிகளை எடுக்க வேண்டும்.
அக்குழிகளில் ஒவ்வொரு குழிக்கும் 1 கிலோ ஆட்டு உரம், அல்லது மாட்டெரு 1 கிலோ போட்டு மேல் மண்ணை கிளறி விட்டு குழியை மூட வேண்டும்.

அல்லது ஏக்கருக்கு 2 டன் மாட்டு எருவை இட்டு நன்கு உழுது நிலத்தினை தயார் செய்து சமப்படுத்தலாம்

நிலத்தை தயார் படுத்திய நாட்களிலிருந்து பத்து நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட குழிகளில் பத்து நாட்கள் கழித்து தேர்வு செய்யப்பட்ட விதைகளை குழிக்கு 4 விதைகள் வீதம் நட வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 400 கிராம் விதைகளை பயன்படுத்தலாம்.
பின்பு 1 வாரம் கழித்து நட்ட நான்கு விதைகளில் நன்றாக வளர்ந்த இரண்டு செடிகளை விட்டு விட்டு மீதி செடிகளை நீக்கி விட வேண்டும்.

கட்டாயம் வாரத்தில் இரு முறையாவது நீர் பாய்ச்ச வேண்டும்
இரண்டு வாரம் கழித்து அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.
பின்பு கழைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவற்றை நீக்க வேண்டும்.

நன்கு பராமரித்தால் நட்டு 45 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும் பின்பு 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்

ஒரு ஏக்கருக்கு சராசரியாக 15 தொடக்கம் 20 மெட்ரிக் டன் பழங்களை அறுவடை செய்யலாம்.

ஏக்கருக்கு 30 மெட்ரிக் டன் தர்பூசணி பழங்களை அறுவடை செய்த விவசாயிகளும் இருக்கின்றார்கள்.

#தர்பூசணியின் பயன்கள்:
கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் தர்பூசணி முதன்மையானது.
வைட்டமின்,தாதுக்கள்,கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.

கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

கோடைகாலங்களில் அதிலும் குறிப்பாக இனிவரும் நாட்களில் தர்பூசணியை பொறுத்தவரை சந்தை வாய்ப்பு மிக மிக அதிகம்.

நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

இந்தப் பக்கத்தில் வரும் அனைத்து கட்டுரைகளையும் நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டுமா.?
அப்படி என்றால் எமது இந்தப் பக்கத்தில் நீங்கள் முதன்மை ரசிகராக உங்களை இணைத்துக்கொண்டால் எமது அனைத்து கட்டுரைகளையும் தவறாமல் உங்களாள் பார்க்க முடியும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!