Friday , October 22 2021

தார்பார்கர் பசு பற்றிய தகவல்

Share This

#தார்பார்கர்_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

தார்பார்கர் மாடுகள் தற்போது பாக்கிஸ்தானின் சிந்து மாகாணத்திலும்
இந்தியா ராஜஸ்தானிலும் அதிக அளவில் காணப்படும் ஒரு மாட்டு இனம்.

இது அதன் பால் கறவைத்திறன் மற்றும் உழைப்புத் திறன் ஆகிய இரட்டை பலன்களுக்காகவும் வளர்க்கப்படுகிறது.

இதன் பெயர் அதன் வழக்கமான வாழ்விடம் மற்றும் பிறப்பிடமான இராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் அருகில் உள்ள தார்பாகார்கர் பகுதியின் பெரில் இருந்து வந்த‍து.

இந்த மாடுகள் நடுத்தர அளவு முதல் பெரிய அளவு வரை இருக்கின்றன. இதன் தோல் நிறம் சாம்பல் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இவை நீண்ட முகமும், நீண்ட வால், சிறிய கால், மற்றும் கொம்புகள் இல்லாமலும். அல்லது சிறிய மொட்டை கொம்பும் இருக்கும்.

இவை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இனமாகும்.
இந்த பசுக்களை இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக வளர்க்கப்படுகின்றது.

இந்த மாடுகள் குறைந்தது 8 முதல் 14 லிட்டர்வரை பால் தரக்கூடியது. இதன் பால் கெட்டியானதாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்த மாட்டினங்கள் அழியாமல் பாதுகாக்கும் வகையில் தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ராஜஸ்தான் மாநில தார்பார்க்கர் மாடுகளை இன விருத்தி செய்யும் பணியை செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணைக்கு 1500 ஏக்கர் ஒதுக்கி இனவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதன் எடை 300 -350 கிலோ வரை வளரும்.
இந்தப் பசுக்கள் சிறிய அளவில் வேறுபட்டிருந்தாலும் ஹரியானா பசுக்களுக்கு இணையாகவே இருக்கும்.

பிறந்த கன்றுகள் சுமார் 30 மாதங்களில் பருவ வயதை அடைகின்றன.
இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 16 ஆண்டுகள்.
சுமார் 13 கன்றுகள் வரை ஈனும்.
ஒவ்வொரு கன்றுக்கும் இடையிலுள்ள தூரம் 14 மாதங்கள் வரை ஆகும்.

நாட்டு மாட்டு பால் உற்பத்தி செய்யும் நோக்கம் உள்ள பண்ணைகளில் அதிக அளவில் இந்த வகை பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த வகை மாடுகள் வளர்ப்பதில் அதிக செலவு ஏற்படாது

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!