Saturday , October 23 2021

திராட்சை பயிற்செய்கை

Share This

#லாபம்_தரும்_திராட்சை_பயிற்செய்கை
☘️🍁🌳🍂🌿☘️🍁🌳🍂🌿☘️🍁🌳🍂🌿
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

🍁 திராட்சை செய்கைக்கு நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலமாக இருத்தல் வேண்டும்.

🍁1 1/2 அடி நீள.அகல, ஆழத்தில்,
10 அடி இடைவெளியில் குழிதோண்ட வேண்டும். இது பன்னீர் ரகங்களுக்கு ஏற்றது.
மற்ற ரகங்களாக இருந்தால் 1×1×1 அடி என்ற அளவுகளில் குழிகள் எடுக்க வேண்டும்.

🍁நன்கு மக்கிய தொழுவுரம், அல்லது பசுந்தழை உரம் அல்லது குப்பைகளைக் கொண்டு குழிகளை நிரப்ப வேண்டும். பின்பு ஜுன், ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும். பன்னீர் திராட்சையாக இருந்தால் 10 × 12 இடைவெளியும் விடவேண்டும்.

🍁செடிகள் நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த மூன்றாவது நாள் தண்ணீர் இட வேண்டும்.
அதைத் தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை கட்டாயம் நீர் பாய்ச்ச வேண்டும்.

🍁 அதோடு கவ்வாத்து செய்ய வேண்டும் என்றாலும், அறுவடை செய்ய வேண்டும் என்றாலும்.
இச்செடிக்கு 15 நாட்களுக்கு முன் நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேடும்.

#கொடி_வளர்ப்பும்_கவாத்துக்
🍁நடவு செய்த செடி வளர வளர அதை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வரவேண்டும். பின்னர் நுனியைக் கிள்ளி விடவேண்டும். பக்கக் கிளைகளை எதிரெதிர் திசைகளில் பரவவிடவேண்டும். இக்கிளைகளை மேலும் மேலும் கிள்ளிவிட்டு, திராட்சைக் கொடியை பந்தல் முழவதும் படரச் செய்ய வேண்டும்.

🍁பொதுவாக நான்கு மொட்டு என்ற நிலையில் கவாத்து செய்வார்கள். அது எந்த ரக திராட்சை என்பதைப் பொறுத்து இரண்டு மொட்டு நிலையிலும் கவாத்து செய்வது உண்டு. அதேபோல், கோடைக்காலப் பயிராக இருந்தால் டிசம்பர் அல்லது ஜனவரியிலும், மழைக்காலப் பயிராக இருந்தால் மே அல்லது ஜுனில் கவாத்து செய்ய வேண்டும்.

🍁 செடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இயற்கை உரங்களை சரியான முறையில் சரியான நேரத்தில் இடவேண்டும்.
இதற்கு மக்கிய உரம், மண்புழு உரம், தொழுஉரம், போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்த முடியும்.

🍁 முக்கியமாக கவனிக்க வேண்டியது, பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர வகைசெய்ய வேண்டும். அதற்க்கு நுனியை அவ்வபோது வெட்டி விடுவது அவசியம். தாய்க் கொடியையும் பக்கவாட்டில் வளரும் கொடிகளின் நுனியையும் 12 முதல் 15 மொட்டுகள் விட்டே வெட்ட வேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ள கொடியாக இருந்தால், அதனை பந்தல் உடன் சேர்த்து கட்டவேண்டும்.

🍁வண்டுகள், இலைப் பேன்கள், மாவு பூச்சுகள் தண்டு துளைப்பான்கள் போன்ற பூச்சுகளை கட்டுப்படுத்த இயற்க்கை முறை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருந்தால். இயற்கை முறையிலான பூச்சிக்கொல்லிகளில் வீரியத்திணை கூட்டி பயன்படுத்துங்கள். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதாக இருந்தால் விவசாய ஆய்வாளர்கள் ஆலோசனைப் படி செய்வது நல்லது.

🍁பழங்கள் சீராகப் பழுப்பதற்கும், பழங்கள் மெழுகு போன்று அழகாக இருப்பதற்கும்.
திராட்சை கரைசலை. காய் விட்ட 20-வது நாளிலும் 40-வது நாளிலும் தெளிக்க வேண்டும்.

🍁பன்னீர் திராட்சையாக இருந்தால் ஒரு வருடத்திற்க்கு ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். அதுவே பச்சை திராட்சையாக இருந்தால் 40 டன் வரை கிடைக்கும். மற்றபடி
விதையில்லாத ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் என்றால் முறையே 15, 20 டன் வரை கிடைக்கும்.

🍁எந்த ரகம் என்றாலும், பருவத்துக்கேற்ப பயிர் செய்து, அழுகல் நோயிலிருந்து காத்து, அறுவடை செய்தால், திராட்சையில் கிடைக்கும் லாபம் அதிகம்தான்.
ஒரு ஏக்கரில் 120 நாளில் இலங்கை ரூபாய் 75 லட்சத்துக்கும் அதிகமாக லாபம் சம்பாதிக்கலாம்.

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!