Friday , October 15 2021

தென்னையில் ஊடுபயிர் வளர்ப்பின் அவசியம்

Share This

#தென்னையில்_நீர்மேலாண்மை_மற்றும்_ஊடுபயிர்_வளர்ப்பின்_அவசியம்
🌳🍃🌿☘️🌳🌾🍃🌿☘️🌳🌴🌾🍃🌿☘️

தென்னந்தோப்பில் பலர் ஊடு பயிர் செய்யாமல் சுத்தமாக பராமரித்து வருகின்றனர்.

அதாவது களைகளை வளர வளர அழிப்பதை பெருமையாக கருதுகின்றனர்.
உண்மையில் தென்னை மரத்துக்கு கிடைக்கும் சத்துக்களை சேரவிடாமல் அப்புறப்படுத்தி தென்னையின் நீர் தேவையை அதிகரிக்கின்றார்கள்.

மூடாக்கு அதாவது உயிர் மூடாக்கு ,மக்கு மூடாக்கு போடுவதினால் நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாது மண்ணுக்கு போர்வையாக இருக்கும்.
இந்த மூடாக்குகள் நுண்ணயிரை பெருக்கி மரத்துக்கு சத்துக்களை கொடுக்கிறது.
மரத்து கழிவுகளை அங்கே போட்டு மூடலாம்.

60 வகையான ஊடு பயிர்கள் தென்னந் தோட்டத்தில் பயிற்செய்கை செய்யலாம்.

ஊடுபயிர்களின் வேர்களில் ஒவ்வொரு வேரிலும் ஒவ்வொரு சத்து உள்ளது அவை தென்னைக்கு கிடைக்க வழிவகுக்கின்றது.
உதாரணமாக உளுந்தின் வேர் முடிச்சுகள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை பாதுகாத்து தென்னைக்கு எடுக்க வழிவகுக்கிறது.
(இந்த நைடஜனுக்குத்தான் மூட்டை மூட்டையாய் யூரியா போடுகின்றோம் ).
அது மட்டுமல்லாது ஊடுபயிர் ஒரு லாபத்தையும் கொடுக்கிறது.

அதேபோல் சிலர் தோப்பை நீர் நிறைந்த வெள்ளக்காடாக எப்பொழுதும் நீரை கட்டி வைத்துள்ளார்கள். அது முற்றிலும் தவறு. அதனால் தென்னை வேர்கள் முழுமையான சத்துக்கிடைப்பதில்லை மற்றும் வேர்கள் அழுகும் வாய்ப்பு அதிகம், அதுபோல மேல் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு தென்னை வளரச்சி மற்றும் காய்ப்பு தன்மை குறையும்.

முடிந்தளவு தென்னந்தோப்புக்கு உயிர் மூடாக்கு போடலாம் முடியாதவர்கள் மக்கு மூடாக்கு அதாவது தென்னை கழிவுகளை தென்னை மரத்தின் அடிப்பகுதியை சுற்றி அங்கேயே விடுவது.

மண்ணிற்கு தேவை நுண்ணுயிர் பெருக்கம். அதற்க்கு நுண்ணுயிர்கள் வாழும் சூழலாக அந்த மண் இருக்கவேண்டும்.
மேல் மண்ணில் தான் அதிக வளம் உள்ளது. இதுபோன்று செய்ய மண் வளம் கெடாமல் பாதுகாக்கப்படும். மற்றும் நீர்தேவையும் குறையும்.

“எந்த மண்ணில் அதிக களை வருகிறதோ அந்த மண் வளமாக உள்ளது என்று அர்த்தமாகும்”

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!