Saturday , October 23 2021

தென்னை நடுகை முறை

Share This

#தென்னை_நடுகை_முறைLF
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் தென்னங்கன்றுகளை நடுகை செய்வதே சிறந்ததாகும்.
இயற்கை முறையில் நடுகை பண்ணப்படும் தென்னங்கன்றுகளை பீடைகள் தாக்குவது குறைவாக இருக்கும்.

தென்னை மரங்களைப் பொறுத்தவரை நாட்டினான், கலப்பினம் என பல ரகங்கள் உள்ளது.
நாட்டினம் நீண்டகாலம்வரை காய்க்கக் கூடியதாகவும்.
கலப்பினம் குறுகிய காலத்துக்கு மட்டும் காய்க்கக் கூடியதாகவும் இருக்கும்.

தென்னங்கன்றுகளை நடுகைக்கு தேர்வு செய்யும்போது குருத்து பகுதியை விட்டு மேலதிகமாக நான்கு அல்லது ஐந்து ஓலைகள் வந்த கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.

தென்னங்கன்றுகளில் எந்த ரகத்தை தேர்வு செய்தாலும். நடும் பொழுது 24 × 26 அடி என்ற இடைவெளியில் குழி தோண்ட வேண்டும்.

இந்த இடைவெளியிலும் குறைவாக
தென்னங்கன்றுகள் நட்டால் எதிர்காலத்தில் தென்னங்கன்றுகள் வளரும் வீதம் குறையும் அதோடு காய்க்கும் வீதமும் குறையும்.

கன்று நடுகைக்கு 3 × 3 × 3 அடி என்ற அளவில் குழி தோண்ட வேண்டும்.
முதல் 1 1/2 அடியில் தோண்டும் மண்ணை ஒருபக்கமும்.
அதற்கு கீழ் தோண்டும் 1 1/2 அடி மண்ணை இன்னொரு பக்கமும் போட வேண்டும்.
( இந்த கீழ் மண்ணை நடுகைக்கு பயன்படுத்தக் கூடாது )

குழிக்குள். தேங்காய் உரித்த பொச்சி மட்டைகளை 3 அடுக்கில் தும்பு மேல்நோக்கி இருக்குமாறு பரப்பவேண்டும்.
இதற்கு மேல் ஒரு கை பிடி உப்பு எடுத்து தூவி விடவேண்டும்

பின்பு ஒரு அடி கணத்தில்.
மேல் மண்ணுடன் 10 kg மக்கிய உரம், 500g சாம்பல் கலந்து போட வேண்டும்.
இதற்குமேல் தென்னங்கன்றை வைத்து மீதமுள்ள மேல் மண்ணுடன் மீண்டும் 500 g சாம்பல் சேர்த்து அனைத்தையும் தேங்காயின் மேற்பகுதியில் சிறிது தெரியும்படி பரப்ப வேண்டும்.
இதற்குமேல் குழிக்குள். தேங்காய் உரித்த பொச்சி மட்டைகளை ஒரு அடுக்கில். தும்பு பகுதி கீழ் நோக்கி இருக்குமாறு தென்னங்கன்றின் அடிப்பகுதியிலிருந்து 1/2 அடி தள்ளி வட்ட வடிவில் பரப்பவேண்டும்.

இவ்வாறு செய்வதனால் நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு எப்போதும் ஈரப்பதன் இருக்கும்.
இதனால் நீர் வீண்விரயம் ஆவது தடுக்கப்படும்.
எதிர்காலத்தில் சிறந்த விளைச்சலை கொடுக்கும்.
அதோடு தென்னங்கன்று சிறிது வளரும் வரை ஈரப்பதன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இத் தென்னங்கன்றுகள் காய்க்கும் வரை ஒவ்வொரு வருடமும் மேலுரமாக மக்கிய உரம் அல்லது தொழு உரம் இடவேண்டும்.
நாட்டு ரகமாக இருந்தால் 6 வருடத்தில் காய்க்க ஆரம்பிக்கும்.
கலப்பு ரகமாக இருந்தால் 3 வருடத்தில் காய்க்க ஆரம்பிக்கும்.

நாட்டு ரகமாக இருந்தால் ஆண்டொன்றுக்கு
150 – 200 காய்கள் உற்பத்தி இருக்கும்.
இந்த உற்பத்தி 30 தொடக்கம் 40 வருடங்கள் வரை எமக்கு கிடைக்கும்.

கலப்பு ரகமாக இருந்தால் ஆண்டொன்றுக்கு 250 – 350 காய்கள் உற்பத்தி இருக்கும்.
இந்த உற்பத்தி 15 தொடக்கம் 20 வருடங்கள் வரை எமக்கு கிடைக்கும்.

இது சம்பந்தமான மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெறலாம்.
Ph:0770239784

நன்றி.
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!