Friday , October 15 2021

தென்னை பயிர்ச்செய்கையின் ஊடுவளர்ப்பாக மீன் வளர்க்கும் முறை

Share This

இந்த மாதிரியான முறை பிலிப்பைன்ஸ்சில் பயன்படுத்தப்படுகின்றது

தென்னை நாட்டிய நிலத்தை முழுவதுமாக பண்ணைக்குட்டையாக மாற்றி மீன் வளர்ப்பதன் மூலம் இத் தோட்டத்தில் அதிகளவான விளைச்சலை பெற்றுக் கொள்ளக் கூடியவாறு இருக்கும்
அதோடு இரட்டிப்பு வருமானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவாறும் இருக்கும்
இந்தமாதிரியான விவசாய முறையில்.
பயன்படாத நிலத்தையும் பயன்படுத்தலாம்,
ஆனால் அதிக அளவில் நீர் உள்ள இடங்களில் மட்டுமே இவ்வாறான பண்ணை கட்டமைப்பை அமைக்க முடியும் என்றாலும் ஒரு சில பண்ணையாளர்கள் மழை நீரை பயன்படுத்தி இவ்வாறு அமைத்தும் வருகின்றார்கள்.
அதோடு நிலம் சமமாக இருந்தால் மட்டுமே இவ்வாறு பண்ணை அமைக்க முடியும்.
குறைந்த அளவில் நீர் உள்ள நிலங்களில்.
மழை நாட்களில் ஒன்றிரண்டு
முறை பெருமழை பெய்தால்
சில மாதங்களில் நமது நிலங்களில் இவ்வாறு நீர் தேங்க. வாய்ப்பும் உள்ளது.
இந்நிலையை பயன்படுத்தி மீன் வளர்ப்பை பண்ணையாளர்கள் மேற்கொள்கின்றனர்.

குறிப்பு
இவ்வாறான பண்ணை கட்டமைப்பை ஏற்படுத்தும் போது பண்ணையாளர்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
கட்டாயம் 26 × 26 என்ற இடைவெளியில் தென்னங்கன்றுகளை நடவேண்டும்.
இதற்கு இடையில் ஏதாவது ஒரு நிரலில் நேரான முறையில் சரியாக நடுப்பகுதியில் 8 அடி அகலம் கொண்ட வாய்க்கால் அமைக்க வேண்டும்
அதாவது குறைந்தது ஒரு தென்னையிலிருந்து 9 அடி நீள அகலத்தில் நிலம் இருக்க வேண்டும்
வாய்க்கால் அமைக்க இருக்கும் நிரலில் இரு தென்னங்கன்று க்கு இடைப்பட்ட தூரத்தை 28 அடி இடைவெளி இருக்குமாறு நாட்டினால் இதனிடையே 10 அடி அகலம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க முடியும்.
ஆனால் 26 அடி க்கு குறைவான இடைவெளியில் தென்னங்கன்றுகளை நாடினால் நிச்சயமாக பண்ணை குட்டை அமைக்க முடியாது.
மேலும். உங்களுக்கு தேவையான வேறு கட்டுரையின் தலைப்பினை அல்லது உங்கள் அபிப்பிராயத்தை இப்பதிவில் கமெண்டில் பதிவிடுங்கள்
அதற்கேற்றாற்போல் கட்டுரைகளை நாங்களும் பதிவிடுவோம்.
மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக என்னை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784
நன்றி…
Laxci Farm.

Share This

About admin

Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!