Thursday , October 14 2021

தேமோர் கரைசல் என்றால் என்ன இதனை உற்பத்தி செய்வது எப்படி

Share This

#தேமோர்_கரைசல்_என்றால்_என்ன_இதனை_உற்பத்தி_செய்வது_எப்படிLF

☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿

தேமோ கரைசல் என்பது குறுகிய கால பயிர்களின் பூக்கள் உதிர்வதை கட்டுப்படுத்தவும். அப் பயிர்களிலிருந்து திரட்சியாக காய்கள் காய்க்கவும் பங்காற்றுகின்றது.

குறுகிய கால அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த முடியும்.

குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும் அதோடு சிறப்பாக செயல்படும்.

இத் தேமோ கரைசலில் சிறு மாற்றங்கள் செய்து நில வள பயிர் வளர்ப்பு ஊக்கியாகவும் பயன்படுத்த முடியும்.

#உற்பத்தி_செய்யும்_முறை

🌿தயிர் 1 லீட்டர்

🌿இளநீர் ஊற்றி பிழிந்த தேங்காய் பால் 1 லீட்டர்.

🌿பெருங்காயம் 10 கிராம்.

🌿நன்கு பழுத்த வாழைப்பழம் 200 கிராம்

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி நீர் போன்று நன்கு கலக்கி இரண்டு நாட்கள் மூடி வைக்க வேண்டும்.

பின்பு இக்கரைசலை நன்கு வடிகட்டி எடுத்து 1 லீட்டர் கரைசலுக்கு. 9 லீட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் கலந்து. பயிர்கள் பூக்கும் தருவாயில் நன்கு நனையுமாறு மருந்து அடிக்கும் இயந்திரம் மூலம் தெளிக்க வேண்டும்.

#குறிப்பு

இக்கரைசலை பயிர்கள் பூக்க முன்பும் பயன்படுத்தலாம்.

பயிர்கள் பூத்த பின்பு பயன்படுத்துவதாக இருந்தால் மாலை வேளையில் பயன்படுத்த வேண்டும்.

காலையில் பயன்படுத்தக்கூடாது காரணம் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.

Ph: 0770239784

நன்றி..

Laxci Farm.

 

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!