Saturday , October 23 2021

தோடை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

Share This

#தோடை_பயிரிடும்_முறை_மற்றும்_பயன்கள்LF
🌳🍂☘️🍁🌿🌳🍂☘️🍁🌿🌳🍂☘️🍁🌳

தோடை, வெப்பம் மற்றும் மித வெப்பமண்டலங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பழத்தின் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும்.

தோடை சிட்ரஸ் வகையைச் சேர்ந்த அமிலத் தன்மை இல்லாத பழமாகும்.

தோடையானது தற்போது இந்தியாவில் பரவலாக பயிர் செய்யப்பட்டு வருகிறது.

எப்படி பயிரிடுவது…?

#இரகங்கள் :
ரங்காபுரி, நாட்டு வகைகள் ஆகியவை சாகுபடிக்கு ஏற்றவை.

#பருவம்
ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

#மண்
தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரளைமண் நிலங்கள் ஏற்றவை. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

#நிலம் தயாரித்தல்
நடுகைக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழத்தில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். குழியில் ஒரு கூடை எரு மற்றும் மேல்மண் ஆகியவற்றைக் கலந்து இட்டு 15 நாட்கள் ஆறப்போட வேண்டும்.

#விதை
குருத்து ஒட்டு செய்த செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

#விதைத்தல்
நாற்றின் ஒட்டுப்பகுதி தரைக்கு மேல் அரையடி உயரத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க நீளமானக் குச்சியை ஊன்றி செடியுடன் இணைத்துக் கட்ட வேண்டும்.

#நீர்_நிர்வாகம்
நட்டவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின்பு குறைந்தது 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றவேண்டும். செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

#உரங்கள்
இயற்கை உரமாக ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ எரு, 300 கிலோ மண்புழு உரம், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, இவற்றை ஒன்றாகக் கலந்து, ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்துக்கு முன்பாகக் மரங்களுக்கு போட வேண்டும்.

ஐந்து வயது மரங்களுக்கு 2 அடி இடைவெளியிலும், அதற்கு மேல் வயதுள்ள மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும்.
1 அடி வட்டப்பாத்தி எடுத்து மேற்கண்ட கலவையில் ஒவ்வொரு மரத்துக்கும் 10 கிலோ அளவுக்கு போட வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும்.

#பாதுகாப்பு_முறைகள்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மரத்தில் இடைஞ்சலாக இருக்கும் கிளைகளை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கவ்வாத்து செய்ய வேண்டும்.

நுற்புழுக்களின் தாக்குதல் இருந்தால் மரம் ஒன்றுக்கு சூடோமோனஸ் புளூரசன்ஸ் மருந்தை 20 கிராம் வீதம் மரத்திலிருந்து 50 செ.மீ தள்ளி 15 செ.மீ ஆழத்தில் இடவேண்டும்.

#இலைச்சுருட்டுப்_புழு
100 லீட்டர் தண்ணீரில் வேப்பங்கொட்டைச்சாறு 7 லீட்டர் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம் நிச்சயம் கட்டுப்படும்

#அறுவடை
செடி நடவு செய்த 4ம் ஆண்டில் பூவெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக விளைச்சல் கிடைக்க ஆரம்பிக்கும்.

தோடை ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பூ பூத்து
ஏப்ரல்-மே மாதங்களில் இடைப்பருவ விளைச்சலும்.
ஜூன்-ஜூலை மாதங்களில் பூ பித்து செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் முழு விளைச்சலும் கிடைக்கும்.

ஒரு ஹெக்டருக்கு 30 டன் பழங்கள் வரை கிடைக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!