Friday , October 15 2021

நத்தைகளை கட்டுப்படுத்தும் எளிய வழிமுறைகள்

Share This

#நத்தைகளை_கட்டுப்படுத்தும்_எளிய_வழிமுறைகள்LF
🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳🌿🍁☘️🍂🌳

நமது பயிர்களை அழிப்பதில் நத்தையும் பெரும் பங்கு வகிக்கின்றது.
ஆம். பயிர்களின் இலைகள் மற்றும் குருத்து பகுதிகள் பூக்கள் என அதிகமானவற்றை நத்தைகள் உண்ணுகின்றன.

இவற்றை நம் முன்னோர்கள் கூறியது போன்று இயற்கையான முறையில். சுலபமாக கட்டுப்படுத்த முடியும்.

இயற்கையான முறையில் நத்தைகளை கட்டுப்படுத்த பொதுவாக 3 வகையான முறைகளை பயன்படுத்த முடியும்.

🌿1. நமது தோட்டத்தில் நத்தைகள் அதிகமாக காணப்படும் இடங்களை சுற்றி நெல் உமியினை தூவி விட்டால் அவ்விடத்தில் நத்தைகள் நிச்சயமாக வராது.

🌿2. இயற்கை கிருமி நாசினி மூலம் நத்தைகளை விரட்ட முடியும்.
இதற்குரிய கிருமிநாசினி உற்பத்தி செய்யும் முறை.
கோமியம் 1 லிட்டர்
உறைப்பு உள்ள பச்சை மிளகாய் 200g
அடுப்பு சாம்பல் 200g
பெருங்காயம் 15g

பச்சை மிளகாய், அடுப்பு சாம்பல், பெருங்காயம், இவை மூன்றையும் நன்கு அரைத்து கோமியத்தோடு கலக்கி ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.

மறுநாள் இவற்றை துணியில் வடிகட்டி எடுத்து.
1 லிட்டர் கரைசலுக்கு 7 லிட்டர் தண்ணீர் என்ற வீதம் கலந்து நத்தைகள் நடமாடும் செடிகள் மற்றும் நிலத்தில் தெளிக்கலாம்.
நிச்சயம் அவ்விடத்தில் நத்தைகள் நடமாட்டம் இருக்காது.

🌿3. மயில், செண்பகம், கினிக்கோழி, நாட்டுக்கோழி, போன்றவை நத்தைகளை விரும்பி உண்ணக் கூடியவை. ஆகையால் இவற்றை எமது தோட்டத்தில் அனுமதித்தால் அங்குள்ள நத்தைகள், பூச்சிகளையும் கொத்தி சாப்பிட்டுவிடும்.

இவற்றில் கினி கோழி மற்றும் செண்பகம் இரண்டும் நம் பயிர்களுக்கு ஆபத்தினை விளைவிக்காது.
ஆனால் மயில் மற்றும் நாட்டுக்கோழிகள் நம் பயிர்களின் குருத்து பகுதி, மற்றும் காய்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் கொத்தி சாப்பிட்டு விடும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!