Thursday , October 21 2021

நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் செலவு இல்லாமல் கோழிகளுக்கு இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தலாம்

Share This

#நாட்டுக்கோழி_வளர்ப்பவர்கள்_செலவு_இல்லாமல்_கோழிகளுக்கு_இயற்கை_ #மருத்துவத்தை_பயன்படுத்தலாம்
🍀🍂🍃🍁🌳🍀🍂🍃🍁🌳🍀🍂🍃🍁🌳🍀🍂🍃🍁🌳

நாட்டுக் கோழிகளுக்கு வரும் அனைத்து வகையான நோய்களுக்கும் செலவில்லாமல் முற்றுமுழுதாக இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தலாம்

1 மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி கோழிகளுக்கு கொடுத்து வந்தால். ரத்தக் கழிச்சல் வராது,

2 சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெய் சேர்த்து இடித்து அப்பப்போ கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்,

3 குஞ்சுகளுக்கு வைக்கின்ற தண்ணீரில் வசம்பைக் கலந்துவிட்டாலும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்,

4 குளிர்காலத்தில் தண்ணீரில் அதிமதுரம் பொடியை கலந்து கொடுத்தால் சளி பிடிக்காது,

5 வெள்ளைப்பூசணியை தீவனத்தோடு கலந்து கொடுத்தால் குடற்புழு குறைந்துவிடும்,

6 புரதச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய கோழிகளுக்கு கொடுக்கும் தீவனத்தில் கருவாட்டு தூளை கலந்து வைக்கலாம்

புதிதாக பண்ணை ஆரம்பிக்க இருப்பவர்கள்,
மற்றும் கோழி பராமரிக்கும் முறை தெரியாதவர்கள் அருகில் உள்ள
பண்ணையாளர்களிடம் பூரண விளக்கம் மற்றும் பராமரிப்பு முறை பற்றி
தெரிந்துகொள்ளுங்கள்,

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!