Saturday , October 23 2021

பசுக்கள் சினைப்படுத்தலுக்கு தயாராகுவதை எவ்வாறு அறிந்து கொள்வது

Share This

#பசுக்கள்_சினைப்படுத்தலுக்கு_தயாராகுவதை_எவ்வாறு_அறிந்து_கொள்வதுLF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿

மாடு சினைக்குவருவதை எப்படி அறிந்துகொள்வது? என்ன அறிகுறிகளை வைத்து சினைக்கு விடலாம்.?

முதல்கட்டமாக பசுமாடுகளை சினை படுத்த முன்பு கட்டாயம் குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும்
அதோடு உங்கள் பண்ணையில் பசுக்களின் கண்ணில் படுமாறு நிச்சயம் ஒரு காளைமாடு வைத்திருக்க வேண்டும்
( இது பண்ணை நுணுக்கங்களில் ஒன்று )

பசு சினைக்குவருவதர்க்கு 21 நாட்களுக்குமுன்னர், சினைமுட்டை
உடைப்பினால், இரத்தப்போக்கு ஏற்படும். அதன்பின்னர் ஆரோக்கியமுள்ள ஒரு பசு ஒவ்வொரு 21 நாட்களுக்கொருமுறை சினைக்குவரும்

#சினைக்குவரும் அறிகுறிகள்:
🌿பசுவின் பிறப்புறுப்பு வழமைக்கு மாறாக சிவந்திருக்கும்
🌿திரவம்போன்று கால்வரை வெண்மையான திரவம் நூல் போல் வருதல், 🌿அல்லது அதன் படுக்கையில் சிந்தியிருத்தல்,
🌿உணவு எடுக்காமை,
🌿சக மாடுகளில் மேல் தாவுதல்,
🌿அடிவயிற்றில் இருந்து கத்துதல்.
🌿காளை மாடு நிற்கும் இடத்தை தேடி செல்லும்
இது போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலமாடுகளுக்கு திரவம் ஒழுகாமல், ஏனைய அறிகுறிகளை காட்டும்.

மேலும் சினைப்பிடிப்பதர்க்கான அறிகுறிகளை நீங்கள் கண்டால்,
திரவம் வடியத்தொடங்கிய நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் காளை மாடை பசுவோடு அவிழ்த்து விடவேண்டும் அல்லது சினை ஊசிபோடவேண்டும்.
மேலும்,

சினைக்கான திரவம் வடியத்தொடங்கிய 5 மணி நேரம் கழித்து, அடுத்துவரும் 7 மணினேரமே மிகவும் உகந்த நேரமாகும்.
பசு சினைப்படுத்தப்பட்ட பின்பு வெயிலுக்குள் மாடு செல்லக்கூடாது.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் பசுவிடம் தென்படாவிடின். அப்பசு ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்

பசுக்களை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டும்
இவ்வாறு செய்வதனால் பசுக்களை மிக விரைவாக சினைப்படுத்தலுக்கு தயாராகும்
இதனால்தான்
மழைகாலத்தில் (குழிர் நேரத்தில்)
சினைப்பிடிக்கும் தன்மை மிகவும் கூடுதலாக இருக்கும்.

மேலும் காளை மாட்டோடு புணர்ந்த அல்லது சினை ஊசிபோட்ட நாட்களை கணக்கில் வைத்திருந்தால், 280 -285 நாட்களுக்குள் கன்று ஈன்றுவிடும்.
அதாவது அண்ணளவாக 9.1/2 மாதமாகும்.

முடிந்தவரை ஊசிமூலம் சினைப்படுத்தலை தவிர்த்து.
சிறந்த களைகளோடு சினை படுத்த முயற்சி செய்யுங்கள் இதுவே சிறந்த முறையாகும்.

காளைகள் உள்ள பண்ணைகளில் மாடுகளின் இனப்பெருக்க வீதம் அதிகமாக இருக்கும்.
குறிப்பிட்ட காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மாடுகள் இருக்கும்

ஊசி மூலம் இனப்பெருக்கம் செய்யும் பண்ணைகளில்.
இனப்பெருக்க வீதம் குறைவாகவே இருக்கும்.
இதனை பல பண்ணைகளில் அறிந்து வைத்திருப்பதில்லை.

இப்போது வெயில் அதிகமாக இருப்பதனால் சினைப்படுத்திய பசுக்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் மதிய நேரங்களில் பசுக்களை வெளியில் மேய விடக்கூடாது.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!