Saturday , October 23 2021

பசுமாடு சம்மந்தமான சுவாரஸ்யமான அரிய தகவல்கள்

Share This

#பசுமாடு_சம்மந்தமான_சுவாரஸ்யமான_அரிய_தகவல்கள்LF
🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌿🌳🍁☘️🍂🌳
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃

□பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.

□பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.

□பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.

□பசு மாடு தனது வாழ்நாளில் குறைந்தது 25000 த்திற்கு மேல் பால் கொடுக்க வல்லது.

□ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.

□சாதாரணமாக 350 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.

□ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் புல் உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்குத் தேவை.

□அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.

□ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 15 லிட்டர் சிறு நீரும் 20 – 30 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.

□பசு மாடு ஒரு நாளில் சுமார் 50 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.

□மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.

□பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.

□மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.

□பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.

□கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது..

□பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.

□உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.

□உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச்சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.

□ஒரே நாளில் 97 கிலோ பாலைச்சுரந்து உலகசாதனை செய்த மாட்டின் பெயர் உர்பே ஆகும்.

□இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48
ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்….!!!

மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் பசு…

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!