Saturday , October 23 2021

பண்ணை நண்பர்களுக்கான எச்சரிக்கை பதிவு

Share This

#பண்ணை_நண்பர்களுக்கான
#எச்சரிக்கை_பதிவு
🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡
🌿🍁🍀🍂☘️🌿🍁🍀🍂☘️🌿🍁🍀🍂☘️

ஒரு சில பண்ணையாளர்களிடமிருந்து எமக்கு வந்த முறைப்பாடுகளை வைத்து இப்பதிவினை நாங்கள் பதிவிடுகின்றோம்

நண்பர்களே!
போலியான விளம்பரங்கள் மூலம் சில நபர்கள் உங்களை ஏமாற்றி பணம் பெறும் நடவடிக்கையை செய்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

Viber. WhatsUp. Messager. Facebook. குழுக்களின் மூலம் தங்களை பண்ணையாளர்கள் என்று அறிமுகமாகும் நபர்கள் போலியான புகைப்படங்களை பகிர்வதனுடாக அழகான பறவைகள் விலங்குகள் தங்களிடம் விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் செய்வர்கள்.

முதலில் உங்களின் மாவட்டத்தை தெரிந்து கொண்டு பின்னர் அவர்கள் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என சொல்லுவர்.உங்களின் இடத்திற்கு பஸ்ஸீல் அல்லது டெலிவரி சேவீஸ் மூலம் அனுப்பலாம் என சொல்லுவர்கள்

அதற்கான பணத்தை உங்களை முன்கூட்டியே வங்கிக்கணக்குக்கு அல்லது Ez cash மூலம் அனுப்ப சொல்லுவர்கள்.
நீங்கள் பணம் அனுப்பிய பின்னர் அவர்கள் உங்களுடனான தொடர்பை துண்டித்து விடுகின்றார்கள்.

அனைத்து பண்ணையாளர்களும் தவறானவர்கள் என்று நான் கூறவில்லை
எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்
ஓர் இரு நபர்கள் செய்யும் தவறால்
மற்றைய நல்ல மனிதர்களையும், (பண்ணையாளர்களையும்) பாதிக்கின்றது

#நண்பர்களே
தயவுசெய்து யாரிடமாவது அல்லது நானாக இருந்தாலும்.
பண்ணை விலங்குகள் அல்லது பண்ணை உற்பத்தி பொருட்கள் ஏதும் வாங்குவதென்றால் நேரிலே சென்று பார்வையிட்டு வாங்குங்கள்.
நேரில் சென்று வாங்க இயலாது என்றால் அந்த பொருளை வாங்க வேண்டாம்.

உங்கள் உறவினர்களாக இருந்தால் அல்லது உங்களுக்கு நன்கு தெரிந்தவராக இருந்தால்
அல்லது உங்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தால் பரவாயில்லை பணத்தினை அனுப்பி நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி…
Laxci Farm…

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!