Friday , October 15 2021

பிரீசியன் பசு பற்றிய தகவல்

Share This

#ஃபிரீசியன்_பசு_பற்றிய_தகவல்LF
🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂🐃
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன் மாடுஎன்பது ஒரு ஐரோப்பிய கறவை மாடு ஆகும்.
இவை டச்சு மாகாணங்களான வடக்கு ஹாலந்து மற்றும் ஃபிரிஸ்லாந்து பகுதிகளில் தோற்றிய ஒரு மாட்டு இனம் ஆகும்.

இவை இதனாலேயே இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலும் இவை தற்போது வடக்கு ஜெர்மனி மற்றும் ஜுட்லாண்ட், ஷிலேஸ்விக்-ஹோல்ஸ்டின் ஆகிய பகுதிகளில் பரவியுள்ளன.
இவை உலகின் அதிக பால் கறக்கும் கறவை மாடுகள் என அழைக்கப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் பல பண்ணைகளில் அதிகமாக பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் மாடுகள் ஆகும்.
இந்த மாடுகள் அதிகமாக குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக் கூடியதாக இருக்கின்றது.

வெப்ப வலயத்திலுள்ள பண்ணையாளர்கள் இவ்வகையான பசுக்களை பால் உற்பத்திக்காக பயன்படுத்துவது மிகக் குறைவு.

ஒரு சில பண்ணையாளர்கள் பல சிரமத்திற்கு மத்தியில் இது போன்ற பசுக்களை கொள்வனவு செய்து பண்ணை அமைத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பசுக்களை கொள்வனவு செய்து பண்ணை அமைப்பது பெரிய விடயமல்ல இருப்பினும் அதிக செலவினத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த மாடுகள் வெளிநாட்டு பால் மாடுகளில் அளவில் மிகவும் பெரியதாகவும், பெரிய பால் மடிகளையும் கொண்டவை.
சில வளர்ந்த பசுக்கள் 500 – 600 கிலோவரை இருக்கும்.

இவை பொதுவாகக் கறுப்பு-வெள்ளை, சிவப்பு-வெள்ளை கலந்த நிறத்தில் காணப்படும்.
பிறந்த கன்றுகள் 24-27 மாதங்களில் சினைப்படுத்தலுக்கு தயாராகும்.

இந்த இன மாடுகளின் ஆயுட்காலம் சுமார் 8-9 ஆண்டுகள்.
சுமார் 5-6 கன்றுகள் வரை ஈனும்.
ஒவ்வொரு கன்றுக்கும் இடையிலுள்ள தூரம் 16 மாதங்கள் வரை ஆகும்.

இவற்றில் கலப்பு அற்ற மாடுகள் ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும். அதேநேரம் இதன் கலப்பின மாடுகள் 10-15 லிட்டர் பாலை தினசரித் தரும்.
இவை தரும் பாலில் கொழுப்புச்சத்து குறைவான அளவாக 3.45 சதவீதமே.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி..
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!