Thursday , October 21 2021

பீர்க்கங்காய் பயிற்செய்கை

Share This

#அதிக_லாபம்_தரும்_பீர்க்கங்காய்_பயிற்செய்கை
🌶️🍋🍆🥑🍊🍑🌶️🍋🍆🥑🍊🍑🍅🌶️🍋
🍃☘️🌳🌾🍃☘️🌳🌾🍃☘️🌳🌾🍃🌾☘️

காய் வகைகளில் அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ணுவது பீர்க்கங்காய்.
கொடி வகையான இந்தப் பயிரின் வளர்ச்சிக்கு பந்தல் அமைப்பது அவசியமாகும்.

குறைந்த முதலீட்டில் பீர்க்கங்காய் பயிரிட்டு, ஒரு ஏக்கருக்கு 6 டன் வரை விளைச்சல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும்.

பொதுவாக மண் பாங்கான தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளும் ஏற்றதாகும். இந்தப் பயிரை கோடை, மழைக் காலங்களிலும் பயிர் செய்யலாம். கோடைக் காலங்களில் வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு அதிகரிக்காமல் இருத்தல் வேண்டும். கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.

இந்தப் பயிருக்கு ஜூன், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் பருவ காலமாக உள்ளது.
பயிர் ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் படர்கிறது

ஏக்கருக்கு 500g விதை தேவைப்படுகிறது.

ஒவ்வொரு குழிகளுக்குள் ஒரு கிலோ வீதம் மக்கிய உரம் இட்டு நட்டால் போதும்

45 x 45 x 45 செ.மீ குழி அளவில் 2 மீ இடைவெளி மற்றும் 1.5 மீ வரிசை இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிக்கு மூன்று விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டு விட்டு மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும்.

விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுகள் வளர்ந்த உடன், வாய்க்கால் மூலம் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
கொடி வளர்ந்தவுடன் பந்தல் போட்டு கொடியைப் படர விட வேண்டும். ஜீவாமிர்தம் எனும் வளர்ச்சி ஊக்கியை இரண்டு இலைப் பருவத்தில் தெளிப்பதால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை மீண்டும் 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

விதை ஊன்றிய 30 நாள் கழித்து மக்கிய உரம் அல்லது மண்புழு உரத்தை மேலுரமாக இட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் அமைக்கவும்.
முறையே மணிக்கு. 3 லிட்டர் நீ பாச்சக்கூடிய திறன் கொண்ட குழாய்களைப் பதிக்க வேண்டும்.

களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும்.

#பயிர்_பாதுகாப்பு
வண்டுகள், பழ ஈக்கள் மற்றும் புழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தஇயற்கை முறையிலான கிருமிநாசினிகளை பயன்படுத்தலாம்

முதல் அறுவடை விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.

அதைத் தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் 10 முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.

விவசாயிகள் இந்த முறையைக் கடைப்பிடித்தால் ஒரு ஏக்ருக்கு 6 முதல் 7 டன் வரை விளைச்சல் பெற்று பயனடையலாம்.

சந்தையில் பீக்கங்காய்க்கு அதிக கேள்வி உள்ளது ஆகையால் சந்தைப்படுத்தலில் எந்த ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!