Thursday , October 21 2021

புறாக்களுக்கு ஏற்படும் கண் நோய் குறைபாட்டை சரி செய்வது எப்படி ?

Share This

#புறாக்களுக்கு_ஏற்படும்_கண்_நோய்
#குறைபாட்டை_சரி_செய்வது_எப்படி ?
🍃🍁🌳🌾🍂☘️🍃🍁🌳🌾🍂☘️🌿🍁🌳🍂
🐦🕊️🦃🦆🐓🐥🐦🕊️🦃🦆🐓🐥🐦🕊️🦃🐓

பறவைகளுக்கு பொதுவாக உடல் நிலையை தெரிந்து கொள்ள அதன் கண்களை பார்த்தால் தெரிந்து விடும்,

கண்ணின் நிலையை பொறுத்து பறவையின் மனநிலையை தெரிந்து கொள்ள முடியும்,

பறவையின் உடல் நிலை பாதிப்பு அடைந்தால் அதன் கண்கள் தான் முதலில் காட்டி கொடுக்கும்.

இந்த நோய் பாதிப்பு அதிகம் African Love Birds வகையை அதிகம் பாதிக்கும்.

அதிக கண் நோய் வர காரணம் பூச்சிகள்,

இந்த பூச்சிகள் கண் வீக்கம் ஏற்படுத்தும்.இதனை வேறு முறைகளில் சரி செய்ய முடியும் .

கண் நோய் வருவதற்க்கான காரணம் என்ன ?

பறவை மனஅழுத்தம் ( Stress )
புதிய இடம் மற்றும் பனி, வெயில் போன்ற கால நிலை மாற்றங்கள்
நோய் தொற்று காரணம்
வைட்டமின் A குறைபாடு

#எவ்வாறு_சரி_செய்வது ?
முதலில் பாதிக்கப்பட்ட பறவையை தனியாக வைக்க வேண்டும் இது மற்ற பறவைகளுக்கு இந்த நோய் தோற்று ஏற்படாதவாறு பாதுகாக்க,

பாதிப்பு உள்ள பறவையை சிறிது சூடான இடத்தில் வைக்க வேண்டும்.
அதிகம் வெப்பம் இல்லாதவாறு,
காலை வெய்யில் அல்லது திரந்த வெளியில் நிழலில்.

மருந்து கடைகளில் கிடைக்கும் ” CIPLOX-D ” மருந்தை ஒரு சொட்டு வீதம் இரண்டு கண்களிலும் தினமும் காலை ,மாலை வேளைகளில் விடவேண்டும் .

மருந்து விடும் முன் மிதமான சுடுநீர் பஞ்சை கொண்டு துடைத்து விடவேண்டும்.இந்த முறை ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது பயன்படுத்துதல் நலம் .

இது 90 % சரி செய்து விடும் .அப்படி இல்லை எனில் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகவும் .

சரியான உணவு , போதிய அளவு சூரிய ஒளி , சுத்தமான முறையில் பறவை கூண்டு பராமரிப்பு போன்றவை கண் நோய் வராமல் பாதுகாக்கும்.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Gold Rush Showdown™ Slot Machine Game to Play Free

Share This Fantastic Fireworks Yes, all private party rooms have access for both strollers and …

One comment

  1. Avatar

    Like!! Great article post.Really thank you! Really Cool.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!