Friday , October 15 2021

புற்றுநோய் வழக்கில் 289 மில்லியன் டாலர் அபராதம் கட்டிய மான்சாண்டோ நிறுவனம்

Share This

#புற்றுநோய்_வழக்கில்_289_மில்லியன்_டாலர்_அபராதம்_கட்டிய_மான்சாண்டோ_நிறுவனம்LF
☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿☘️🍂🌳🍁🌿

புற்றுநோய் வழக்கில் 289 மில்லியன் டாலர் அபராதம் கட்டிய மான்சாண்டோ நிறுவனம் இந்தியா. இலங்கையில் அசுரவளர்ச்சி அடைந்துவருகிறது

#ரசாயனஉரம், #பூச்சிக்கொல்லி மருந்து, #மரபணு மாற்று விதை (#GMO) என்று விவசாயத்தை அழிக்கும் அனைத்துக்கும் ஒற்றை தலைமையாக இருக்கும் அமெரிக்க கார்பொரேட் நிறுவனம் தான் இந்த #மான்சாண்டோ.

இந்தியாவில் 2017ல் 6 கோடி நட்டத்தில் இருந்த மான்சாண்டோ நிறுவனம் 2018ல் 24 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

ரசாயன தயாரிப்பு பெருநிறுவமான மான்சாண்டோ, #க்ளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் நபருக்கு 289 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்த வழக்கை தொடந்த டேவேயின் ஜான்சன் அமெரிக்கா முழுவதும் இம்மாதிரியான புகார்களை தெரிவித்துள்ள 5000பேர்களில் ஒருவர். கடந்த 2014ஆம் ஆண்டு ஜான்சனுக்கு வெள்ளை அணுக்களில் உருவாகும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளி ஒன்றில், விளையாட்டு மைதானங்களில் புல் தரைகளை பராமரிக்கும் நபராக ஜான்சன் பணிபுரிந்தபோது மான்சாண்டோவின் பூச்சிக் கொல்லி தயாரிப்பை பயன்படுத்தியதாக ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை எட்டு வார காலமாக நடைபெற்றது, மான்சாண்டோவிற்கு எதிரான ஆதாரங்கள் அதிகப்படியாக இருந்ததை இந்த தீர்ப்புக் காட்டுகிறது என பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் சரியாக இருக்கும்போது வெற்றிப் பெறுவது சுலபமானது” மேலும் எதிர்காலத்தில் மான்சாண்டோவிற்கு எதிரான வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

க்ளைபோசேட், உலகளவில் பரவலாக பயன்படுத்தக்கூடிய பூச்சிக் கொல்லி மேலும் அதன் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பு வாதங்களும் நிலவுகின்றன. 2015ஆம் ஆண்டு சர்வதேச புற்றுநோய் குறித்த ஆய்வு முகாமான உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் முகாமை, “க்ளைபோசேட் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்” என தெரிவித்துளார்

பெரும்பாலும் விவாசாய நிலங்களில் இந்த ‘#க்ளைபோசேட்’ பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகக் கூறி #ஆந்திரஅரசும் இந்த பூச்சுக் கொல்லியை தடை செய்துவிட்டது.

புற்றுநோயில் #தமிழகம் முதன்மை வகிப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயத்தை கொள்ளும் அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் அசுரவேகத்தில் வளர்வதை நாம் எப்படி தடுக்க போகிறோம்.

#Organic இயற்கை விவசாயமே நம்மில் இருக்கும் ஆயுதமும். கேடயமும். அதை சரியாக பயன்படுத்தினாலே இவனை வீழ்த்துவது சுலபம்.

பெருமளவிலான எமது பாரம்பரிய விதைகளை அளித்ததும் இந்த மான்சாண்டோ நிறுவனம் தான்.

இந்தியாவில் சீக்கிம் மாநிலத்தில் 100% #இயற்கைவிவசாயம் நடைப்பெறும்போது இது தமிழகத்தில், இலங்கையில் சாத்தியம் இல்லை என்று யாரும் என்ன வேண்டாம்….

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0094770239784

நன்றி..
laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Zestoretic Canadian Pharmacy Online. Where I Can Order Zestoretic

Share This Zestoretic Canadian Pharmacy Online We Zestoretic no Prescription inseparable from his female share …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!