Saturday , October 23 2021

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகள்

Share This

#இயற்கை_விவசாயத்தின்_மூலம்_பூச்சிகளைக்_கட்டுப்படுத்தும்_பூச்சிகள்LF
🐛🦋🐞🐝🐜🐛🦋🐞🐝🐜🐛🦋🐞🐝🐜
🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿🌳🍁🍀🍂🌿

பயிர்களை தாக்கும் பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை, பூச்சிகள் தாவரத்தின் நண்பர்கள்.

இயற்கை யாருக்கும் யாரையும் எதிரியாக உருவாக்கவில்லை. அனைத்து உயிரினங்களும் (மனிதனைத் தவிர) கடவுளின் விதிகளின்படி வாழ்கிறார்கள். ஏனென்றால் கடவுள் சில அடிப்படை சட்டங்களை வகுத்துள்ளார்.

1. தாவர உண்ணிகள் தாவர உணவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. எந்த சூழ்நிலையிலும் தாரவ உண்ணி மாமிசம் சாப்பிட கூடாது.
3. மாமிச உண்ணி தாவர உண்ணியை மட்டுமே உண்ணவேண்டும்.
4. ஒரு மாமிச உண்ணி இன்னொரு மாமிச உண்ணியை உண்ணக் கூடாது.

இந்த நான்கு விதிகளின் மூலம் கடவுள் உயிரினங்களுக்கு இடையே சரியான உறவுமுறையை ஏற்படுத்தியுள்ளார். அதோடு கடவுள் அஹிம்சைக்கும் வன்முறைக்கும் வித்தியாசத்தை காட்டியுள்ளார்.

நாம் மேற்கண்ட விதிமுறையை பூச்சிக்கட்டுபாட்டில் கவனிக்க முடியும். பயிர்களை தாக்கும் பூச்சிகள் தாரவத்திற்கு தீமை செய்யும் பூச்சிகளை.
சில நன்மை செய்யும் பூச்சிகலான அசைவ உண்ணிகளை.
கடவுள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை உண்பதற்கு அனுப்பிள்ளார்.

நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, ஆனால் ஒரு நன்மை செய்யும் பூச்சி தீமைசெய்யும் பூச்சிகளை ஆயிரக்கணக்கில் உண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. உதாரணத்திற்கு மாவுப் பூச்சிகள் பொறிவண்டுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன (கிரிப்டோலிமஸ், ஸ்டிமுலஸ், கிரைசோபா) இதன் பொருள் என்னவென்றால் இயற்கை முறையில் தீமை செய்யும் பூச்சிகள் கட்டுபடுத்தப்படுகிறது

இயற்கை ஒவ்வொரு உயிரினத்தற்கும் ஒரு பரிசு கொடுத்துள்ளார் அது நோயெதிர்ப்பு சக்தி ஆகும். ஒரு உயிரினத்தற்கு சரியான நோயெதிர்பப்பு திறன் இருந்தால் அவை நோய்களை நன்றாக எதிர்த்து போராடி வெற்றிபெறுகின்றன.

எனினும், ஒரே தாய் தந்தையின் இரண்டு குழந்தைகள் ஒன்று பலமாகவும் மற்றொன்று பலவீனமாகவும் இருக்கும்போது, பலமான குழந்தைக்கு நோய்தாக்குல் இருக்காது, பலவீனமான குழந்தைக்கு நோய் தாக்குதல் எற்படும்.

ஏனெனில் பலமான குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதால் அது நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. எனவே மருந்து ஒரு தீர்வாகாது, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே உண்மையான தீர்வு.

மட்கு (Humas) தாவரத்திற்கு நோய் எதிர்ப்பு சக்கியை வழங்குகிறது. இரசாயன பயன்பாட்டால் மட்கு அழிக்கப்படுகிறது. சுபாஷ் பாலேக்கர் விவசாய முறையில் மட்கு உருவாகிறது.

அப்படியானால் பூச்சிகளையும் நோய்களையும் எதிர்க்க நாம் இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும்.

1. மண்ணில் மட்கு உருவாக்க வேண்டும் அதனால் தாவரம் பலமாக மாறும்.
2. நாம் நன்மை செய்யும் பூச்சிகளை பயிர்களை நோக்கி வரவழைக்வேண்டும்.
இந்த அழைப்பை எப்படி செய்வது?
நன்மை செய்யும் பூச்சிகள் அதிகமாக ஈர்க்கும் ஊடுபயிர்களை பயிர்களின் இடையே நடவு செய்யவேண்டும்.

#ஊடுபயிர்ககள் பட்டியல்
தட்டைப்பயறு, துவரை, மக்காச்சோளம், சாமந்தி, துளசி, கம்பு, முருங்கை, கேரட், முள்ளங்கி, கடுகு, கொத்தமல்லி, பீன்ஸ், வெங்காயம், பெருஞ்சீரகம், சீரகம் போன்றவற்றை ஊடுபயிர்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

90 சதவீதம் பறவைகள் மாமிச உண்ணிகள், அவை புழுக்களை உண்கின்றன, அவை பயிர்களை கவனித்து புழுக்களை உண்ணும்.
அவை வந்து உட்காருவற்கு இடம் கேட்கின்றன, இதற்கு சோளமும் சூரிய காந்தியும் நடவு செய்யவேண்டும்.

இதற்கு பதிலாகத் தான் நம் முன்னோர்கள் வயல்களிலும் சரி தோட்டங்களிலும் சரி தென்னைமட்டை அல்லது பனை மட்டை அடிப்பகுதி மேல் இருக்குமாறு கீழ்நோக்கி குத்தி விடுவார்கள்.
இதனால் மாமிச உண்ணி பறவைகள் வயல்களில் நட்டு விடும் மட்டை மேலிருந்து பயிர்களில் உள்ள புழுக்களை பிடித்து சாப்பிடுகின்றது.

தவளைகள் ஆயிரக்கனக்கான பூச்சிகளை உண்ணும். ஆனால் தவளைகள் இயற்கை விவசாய்த்தில் மட்டுமே அதிக அளவில் வரும். சிவப்பு எறும்புகள் மற்றும் சிறு எறும்புகளும் ஆயிரக்கனக்கான பூச்சிளைக் கொல்லும். இந்த முறை முழுவதும் இயற்கை விவசாயத்தில் சாத்தியமாகும்.

நாம் யூரியா பயன்படுத்தினால் தீமைசெய்யும் பூச்சிகளுக்கு அழைப்பு விடுகிறோம். ஒட்டுரகங்களும், மரபனு மாற்றப்பட்ட ரகங்களும் பயிரின் தேவையைவிட இரண்டு மடங்கு அதிக சத்துக்களை எடுத்துக்கொள்ளும்.

உதாரணத்திற்கு வேர்களுக்கு 10 கிராம் நைட்ரேட் தேவைப்பட்டால் வேர்கள் 20 கிராம் நைட்ரேட் எடுத்துக்கொள்ளும், அதில் 10 கிராம் மட்டுமே பயன்படுத்திவிட்டு மீதம் உள்ள 10 கிராம் நைட்ரேட் தாவர உடலில் செல்களுக்கிடையே படிகிறது. இந்த நைட்ரேட்டுகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெளிப்பொருளாகும்.

பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் போது அவற்றின் எச்சங்கள் இலையில் உறிச்சப்பட்டு செல்லின் படிகிறது. இந்த பூச்சிக் கொல்லிகளின் எச்சங்களும் தாவரங்களுக்கு வெளிப்பொருளாகும்

நாம். மண்புழு உரம் அல்லது தொழுஉரம் பயன்படுத்தும்போது காட்மியம், ஆர்செனிக், மெர்குடி, காரியம் போன்ற விஷமுடைய கனஉலோகங்கள் தாவர உடலில் செல்களில் படிகிறது. இந்த கனஉலோகங்களும் தாவரங்களுக்கு வெளிப்பொருளாகும்.

வெளிப்பொருட்கள் தாரவத்தின் உடலில் நுழைவதால் தாவர உடல் அதிர்வடைகிறது அதன் நோய் எதிர்ப்பு தன்மையை இழக்கிறது,
எனினும் அது உயிர்பிழைக்க விரும்புவதால் இலைகள் காற்றில் செய்தி அனுப்புகிறது அதாவது பூச்சிகளே வருக வருக, என்று செய்தி அனுப்புகிறது,

மாவுப்பூச்சி, புழுக்கள் போன்றவை அழைப்பை பெற்றபின் அவை தாவரத்திற்கு வந்து சாறை உறிஞ்சுகிறது. அதன் பின்னர் தாவரம் சீரடைகிறது.

உண்மையில் தீமை செய்யும் பூச்சிகள் தாவரத்தின் எதிரிகள் அல்ல நண்பர்கள். மோசமான நிலையில் அவற்றிற்கு உதவுகின்றன, காட்டில் ஏன் பூச்சித்தாக்குதல் இல்லை, வரப்பில் ஏன் இல்லை? ஏனெனில் அங்கெல்லாம் யூரியா போடவில்லை அதனால் பூச்சிளும் வரவில்லை.

பயிரை பாதுகாக்க வேண்டுமெனில் பூச்சித் தாக்குல் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற நாம் மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும்
1. இரசாயன விவசாயத்தை நிறுத்த வேண்டும்
2. தொடர்ந்து மூடாக்கிட்டு, ஜீவாமிர்தம் கொடுக்கவும், இதனால் மட்கு உருவாகும்.
3. ஊடுபயிர்களை பயிர் செய்ய வேண்டும் இவை நன்மைசெய்யும் பூச்சிகளை ஈர்க்கின்றன.

ஆனால் இரசாயனத்தில் இருந்து பாலேக்கர் விவசாய முறைக்கு மாறும் முதல் ஆண்டில் நமது தவறுகளால், 100 சதவீதம் இந்த நுட்பத்தை பின்பற்றாத காரணத்தால் முதல் ஆண்டில் 100 சதவீதம் நோயெதிர்ப்பு சக்தி உருவாகமல் இருக்கலாம்.

அப்போது முதல் ஆண்டில் சில மருந்துகளை தெளிக்க வேண்டும். அவற்றை கடையில் இருந்து வாங்கக்கூடாது. இவற்றை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளவேண்டும். கிராமதில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் மூலப் பொருட்களைக் கொண்டே தாயரிக்க வேண்டும்.
ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யா, அமிர்தகரைசல், கற்பூரகரைசல் போன்றவற்றைதான் கூறுகின்றோம்.

யூரியா முற்றிலும் அபாயம்
ரசாயன முறையில் உற்பத்தியாகும் காய்கறிகளை மற்றவர்கள் மட்டும் தான் பயன்படுத்த போகின்றார்களா.?
இல்லை நமது பிள்ளைகள் நமது குடும்பத்தாரும் தான் பயன்படுத்துவார்கள்

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!