Saturday , October 23 2021

மண்ணை வளமாக்கும் பயிர்கள்

Share This

#மண்ணை_வளமாக்கும்_பயிர்கள்
🌳🌿🍁☘️🍃🍂🌳🌿🍁☘️🍃🍂🌳🍁☘️

அணைத்து பண்ணையாளர், மற்றும் விவசாயிகளுக்குமான பதிவாகும்,

🌿 நாம் வளர்க்கும் அல்லது பயிரிடும் பயிர்கள் மண்ணிற்கு பல விதமான நன்மைகளை கொடுக்கின்றன. அதை பற்றி இங்கு காண்போம்.

#மண்ணை_திருத்தும்_பயிர்கள்:
🌿 மண்ணை திருத்தி அதன் வளர்ச்சியை பெருக்கும் பயிர்களாக அருகம்புல், சூரியகாந்தி, சீமை அகத்தி மற்றும் தக்கைப்பூண்டு போன்றவை உள்ளன.

🌿 அருகம்புல் மண்ணில் உள்ள உப்பை எடுத்துக்கொண்டு, மண்ணின் உவர்ப்பு தன்மையை குறைக்கும்.

🌿 சூரிய காந்தி மண்ணில் உள்ள சோடியத்தை (உப்பு – உவர்) உறிஞ்சி எடுப்பதில் வல்லமை படைத்ததாகும்.

🌿 அகத்தி மற்றும் தக்கைப்பூண்டு களர்நிலத்திலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.

#தழைச்சத்தை_உறிஞ்சும்_பயிர்கள்
🌿 பயிறு வகைகள், பசுந்தாள் உரப்பயிர்கள், நிலக்கடலை போன்றவை தழைச்சத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.

#மணிசத்தை_கரைத்து_தரும்_பயிர்கள்
🌿 கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் போன்றவைகள் மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு தரும் தன்மை கொண்டது.

#நுற்புழுக்களை_கட்டுபடுத்தும்_பயிர்கள்
🌿 சூரிய காந்தி, தட்டப்பயிறு, மக்காச்சோளம், சணப்பை, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி போன்றவைகள் நுற்புழு தாக்குதலிருந்து பயிர்களை பாதுகாக்கின்றன.

#களைகளை_கட்டுபடுத்தும்_பயிர்கள்
🌿 சூரிய காந்தி, தட்டப்பயிறு, சோளம், சணப்பை, அகத்தி போன்றவைகள் களைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.

#விஷ_கிருமிகளை_தடுக்கும்_பயிர்கள்
🌿 விஷ கிருமிகளை தடுக்கும் மரங்களாக வேம்பு, புங்கம், பெருநெல்லி, மா, முருங்கை, போன்றவை விளங்குகின்றன.

மேலதிக ஆலோசனை தேவை எனில் தொலைபேசி ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.
Ph: 0770239784

நன்றி…
Laxci Farm.

Share This

About Laxci Farm

Laxci Farm
கால்நடை வளர்ப்பு, பயிர்ச்செய்கை மற்றும் பண்ணை அமைப்பு என்பவற்றின் சந்தேகங்கள் இருந்தால் எம்மை +94770239784 என்ற தொலைபோசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பூரண விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியும்

Check Also

Wargames Campaign Rules

Share This substitute teacher resume 2021 Send your resume as a Word .doc to rest …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!